புதிய அதி­வேக பாதை நிர்­மா­ணத்தின் போதும், வீடுகள் நிர்­மா­ணிப்பின் போதும் மண்­ச­ரிவு அபா­ய­முள்ள இடங்­களை புவி­யியல் நிபு­ணர்­களின் கட்­டாய ஆராய்ச்­சிக்கு உட்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கு­மாறு ஜன­தி­பதி மற்றும்   பிர­த­ம­ரிடம் கோர­வுள்ளோம். 

இதன்­படி எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்ட பகு­தி­களில் இருந்து அகற்­றப்­பட்ட  பின்னர் மீண்டும் அங்கு வந்து குடி­யே­றினால் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என  அரச தொழில்­மு­யற்­சிகள் பிரதி அமைச்சர் எரான் விக்­கி­ர­ம­ரத்ன தெரி­வித்தார்.

அனர்த்தம் ஏற்­பட்­டுள்ள நிலை­மையில் அமைச்­சர்­க­ளுக்கு வாகனம் கொள்­வ­னவு செய்­வ­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இதன்­பி­ர­காரம் வாகன கொள்­வ­னவு செய்­வது தொடர்பில் அடுத்த வரவு செல­வுத்­திட்­டத்தில் அதற்­கென கொள்­கை­யொன்றை நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர அறி­விப்பார் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பிட்ட கோட்­டேயில் அமைந்­துள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாடு­பூ­ரா­கவும் காணப்­படும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக 183 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர் .இந்த உயி­ரி­ழப்­பு­களில் அதி­க­மா­னவை மண்­ச­ரி­வினால் ஏற்­பட்­ட­வை­யாகும். எனவே கட்­டட நிர்­மா­ணத்தின் போது இனிமேல் அவ­தா­ன­மாக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும்.

இதன்­பி­ர­காரம் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்ள அதி­வேக பாதைகள் மற்றும் வீடு­களின் போது கட்­டாயம் மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை உள்­ளதா என்­பது தொடர்பில் ஆராய வேண்டும்.  தொடர்ந்து இவ்­வாறு எச்­ச­ரிக்கை பிர­தே­சங்­களில் குடி­யே­று­வ­தற்கு இட­ம­ளித்தால் பெரும் உயி­ரி­ழப்­புகள் எதிர்­கா­லத்தில் ஏற்­ப­டலாம்.

எனவேஇ புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் வீடுகள் உள்­ளிட்ட நிர்­மா­ணத்தில் மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை தொடர்பில் புவி­யியல் விஞ்­ஞா­னிகள் ஆராய்ச்சி செய்து அதன் பின்­னரே அனு­மதி வழங்க வேண்டும் என்­ப­தனை ஜனா­தி­ப­தி­யி­டமும் பிர­த­ம­ரி­டமும் கோர­வுள்ளோம்.

அத்­துடன் அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட சிறு­தொழில் முயற்­சி­யா­ளர்­கள மற்றும் பாட­சா­லைகள் செல்ல முடி­யாத மாண­வர்­க­ளுக்கு தேவைான வச­தி­களை ஏற்­ப­டுத்தி கொடுப்­ப­தற்கு வங்­கி­களின் ஊடாக விசேட செயல்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

அனர்த்தம் ஏற்பட்டுள்ள நிலைமையில் அமைச்சர்களுக்கு வாகனம் கொள்வனவு செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது.இதன்பிரகாரம் வாகன கொள்வனவு செய்வது தொடர்பில் அடுத்த வரவு செலவுத்திட்டத்தில் அதற்கென கொள்கையொன்றை நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவிப்பார் என்றார்.