சீரற்ற கால­நிலை கார­ண­மாக ஏற்­பட்ட வெள்ளம், மண்­ச­ரி­வினால் ஏற்­பட்ட பாதிப்­பு­களில் மக்­களை மீட்­ப­தற்கு இன, மத பேதம் பாராமல் செயற்­பட்­டமை பெரும் பாராட்­டுக்­கு­ரி­யது.

இனிமேல் இவ்­வா­றான அனர்த்தம் ஏற்­ப­டாமல் இருப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும். அத்­துடன் வெள்ளம் ஏற்­ப­டு­வ­தற்கு கார­ண­மான சட்­ட­வி­ரோத குடி­யி­ருப்­பு­களை நீக்க வேண்டும் என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்தார்.

நாட்டில்  ஏற்­பட்­டுள்ள அனர்த்தம் தொடர்பில் நேற்று ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவ்­வ­றிக்­கையில் மேலும தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

சீரற்ற கால­நிலை கார­ண­மாக பெரும் பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன. இதன்­போது இன,மத, பேதம் பாராமல் ஒற்­று­மை­யாக செயற்­பட்டு வரு­கின்­றனர். எனவே பாதிக்­கப்­பட்ட மக்­களை மீட்­ப­தற்­காக இன பேதம் பாராமல் செயற்­பட்டு வரு­வது பாராட்­டுக்­கு­ரி­ய­தாகும்.

 இந்த அனர்த்­தத்தின் போது பாதிக்­கப்­பட்ட மக்­களை காப்­பாற்­று­வ­தற்கு பெரும் ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கிய முப்­ப­டை­யினர் மற்றும் அரச ஊழி­யர்­க­ளுக்கம் நன்றி கூற கட­மைப்­பட்­டுள்ளேன்.

எனவே, இனிமேல் இவ்­வா­றான அனர்த்தம் ஏற்­ப­டாமல் இருப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும். அத்துடன் வெள்ளம் ஏற்படுவதற்கு காரணமான சட்டவிரோத குடியிருப்புகளை உடன் நீக்க வேண்டும். இனிமேலும் இவ்வாறான குடியிருப்புகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றார்.