வெள்­ளத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள  மக்­க­ளுக்கு உதவும்  நோக்கில் பாகிஸ்­தா­னிய அர­சாங்­கத்­தினால் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ள வெள்ள நிவா­ரண பொருட்கள்  பி.என்.எஸ். சுல்­பிகார் கடற்­படை கப்பல் மூலம் நேற்று  இலங்கை வந்­த­டைந்­தன.

பாகிஸ்­தா­னிய பதில் உயர்ஸ்­தா­னிகர் சர்ப்ராஸ் அஹமட் கான் சிப்ரா  வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்கவிடம் இந்த பொருட்­களை  கைய­ளித்தார். 

இதன்­பொ­ழுது கருத்து தெரி­வித்த  பாகிஸ்­தா­னிய பதில் உயர்ஸ்­தா­னிகர்,  கடி­ன­மான தரு­ணத்­திலே பாகிஸ்­தா­னிய அர­சாங்­கமும் அதன்  மக்­களும் இலங்கை மக்­க­ளுக்கு உத­வு­வ­தற்கு ஒரு­போதும் பின்­நிற்­கப்­போ­வ­தில்லை என கூறினார்.

பாகிஸ்­தா­னிய அர­சாங்கம் உலர் உண­வுப்­பொ­ருட்கள், மருந்­துகள் மற்றும் ஏனைய நிவா­ரணப் பொருட்­களை  இலங்­கைக்கு அனுப்­பி­வைத்­துள்­ள­துடன் , சுல்­பிகார் கடற்­படை கப்­பலில் காணப்­படும் வானூர்தி, மீட்பு படகு, மருத்­துவ குழு மற்றும் நிபு­ணத்­து­வம்­வாய்ந்த ஓட்டுநர்களுடன் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடவும் தயாராகவிருக்கின்றது.