45ஆவது ஆண்டில் கால்பதிக்கும் புதிய அலை கலை வட்டம் அமைப்பு, அதன் கலை இலக்கிய, ஊடக மற்றும் சமூகப் பணிகளை மேம்படுத்தும் நோக்கோடு அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட அதன் மகளிர் அணியின் ஏற்பாட்டில் கலாமித்ரா விருது விழாவை இம்முறை நடத்துகிறது.
புதிய அலை கலை வட்டத்தின் 45ஆவது ஸ்தாபக தினமான ஜனவரி 30ஆம் திகதி இந்நிகழ்வு கொழும்பு-11இல் அமைந்துள்ள கல்யாணமுருகன் மண்டபத்தில் ஸ்தாபகர் ராதாமேத்தா தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் ஆலோசகரும் புரவலர் புத்தகப் பூங்கா மற்றும் ஹாசிம் உமர் நிதியத்தின் நிறுவனருமான ஹாசிம் உமர் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கின்றார்.
அதிதிகளாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் காஞ்சிபுரம் தியாகராஜன், தொழில்அதிபர் ஜி.குணசேகரன், வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜன், தினகரன் பத்திரிகை ஆசிரியர் தெ. செந்தில்வேலவர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.ரி.குருசாமி, சமூக சேவையாளர் அஸிஸ் லஹானா, பிரபல பட்டிமன்ற பேச்சாளர் ஆர். வைத்தமாநிதி, தொழில்அதிபர் ஜே.பி.ஜெயராம் ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக சூரியன் எவ்.எம் வானொலி பிரதானி நவநீதன், எக்ஸலண்ட் சர்வதேச பாடசாலை அதிபர் ஸ்ரீவைகுந்தன், சக்தி எவ்.எம். வானொலி செய்திப்பிரிவு பிரதானி ஆர்.கோகுல்நாத், பிரபல நடனக் கலைஞர் டிஸ்கோராஜா, கருணாநிதி சிதம்பரம், சபேஸன் ஆகியோரும், விசேட அதிகளாக சமூகசேவகி தனலக்ஷ்மி மாதவன், நடன ஆசிரியைகளான ரேனுகாதேவி, செல்வராணி, சர்மிலா சுப்பிரமணியம், பிரியதர்ஷனி விக்கினேஸ்வரன், நதீக்கா சந்திரன், துவாரக ரவீந்திரகுமார், சங்கீத ஆசிரியை பகவதி ரமேஸன் மற்றும் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
நிகழ்வுக்கான ஒத்துழைப்புகளை பிரதம நிர்வாகத்தின் தலைவர் சண்மு, செயலாளர் பி.ரி.செல்வம், பொருளாளர் ஓவியன், உப தலைவர் எஸ். சந்திரன் ஆகியோர் வழங்குகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM