இம்மாதம் நாட்டில் 4 ஆயிரத்துக்கும் அதிக டெங்கு நோயாளர்கள் அடையாளம்

26 Jan, 2025 | 06:59 PM
image

(செ.சுபதர்ஷனி)

நாடளாவிய ரீதியில் இம்மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 4 ஆயிரத்து 44 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

கடந்த மாதம் சுமார் 3,602 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு சனிக்கிழமை 25ஆம் திகதி மாத்திரம் 129 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். 

கடந்த சில நாட்களாக நிலவிவந்த மழையுடன் கூடிய வானிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக டெங்கு பரவல் அதிகரித்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளது. 

அதற்கமைய அனைத்து மாவட்டங்களிலும் பதிவாகக்கூடிய டெங்கு நோயாளர்களின் வீதமும் சடுதியாக அதிகரித்துள்ளது.

டெங்கு பரவலைக் கருத்திற்கொண்டு 19 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் (MOH) அதி உயர் டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. 

அத்தோடு டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 2ஆக உயர்வடைந்துள்ளது. எதிர்வரும் தினங்களில் பதிவாகக்கூடிய டெங்கு நோயாளர்களின் வீதம் மேலும் அதிகரிக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளன.

அத்தோடு கம்பஹா (614), கொழும்பு (537), கொழும்பு மாநகர சபை (506), காலி (257), கண்டி (242), மட்டக்களப்பு (234), இரத்தினபுரி (219), யாழ்ப்பாணம் (182) மற்றும் மாத்தறை (139) ஆகிய மாவட்டங்களில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான அதிகரிப்பை காணக்கூடியதாக உள்ளது. 

ஆகையால் பொதுமக்கள் டெங்கு அபாயத்தைக் கருத்தில் கொண்டு தாம் வாழும் சூழலில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய பகுதிகளை இனங்கண்டு அவற்றை இல்லாதொழித்து தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குருநாகலில் அரிய கடல்வாழ் உயிரின ஓடுகளை...

2026-09-07 17:40:40
news-image

'கொஸ் மல்லி'யின் மைத்துனரான 'பூத களுவா'...

2026-09-07 17:39:52
news-image

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் சில கருத்துகள்...

2026-09-07 17:38:14
news-image

பெண்கள், சிறுவர் பாதுகாப்பு குறித்து ஐ.நா....

2026-09-07 17:17:59
news-image

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

2026-09-07 17:36:25
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவரின் 7 கோடி...

2026-09-07 16:01:44
news-image

சுற்றுச்சூழல் அறிக்கையிடலில் புதிய ஊடக முன்முயற்சி

2026-09-07 15:33:29
news-image

ராஜபக்‌ஷ ஆட்சியாளர்களின் ஊழல்களே நாட்டின் பொருளாதார...

2026-09-07 15:24:19
news-image

நுவரெலியா பேருந்து தரிப்பிடத்தில் போக்குவரத்து சேவையை...

2026-09-07 15:32:04
news-image

மண்சரிவினால் பாதிக்கப்பட்டது வீதி: பொலிஸ் வாகனங்களில்...

2026-09-07 15:14:09
news-image

நல்லூர் தேர் திருவிழாவன்று யாழ். நல்லூர்...

2026-09-07 15:01:28
news-image

சம்மாந்துறை பைனன் ஆற்றுக்கட்டின் புனர்நிர்மாணப் பணிகள்...

2026-09-07 14:56:43