காலி - மாகொல்ல பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணை நபரொருவர் கூரிய ஆயுதத்தால் குத்தியுள்ளதுடன், தாக்குதல் மேற்கொண்டவரும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதன்போது பலத்த காயங்களுக்கு உள்ளாக இருவரும் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

குறித்த கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.