“நமது கதைகள் பின்னிப்பிணைந்துள்ளன, நமது எதிர்காலம் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டது" - 76ஆவது குடியரசு தின செய்தியில் இந்திய பதில் உயர்ஸ்தானிகர்

26 Jan, 2025 | 02:25 PM
image

“இலங்கையின் நம்பகத்தன்மை மிக்க நண்பர் என்பதை மீண்டும் மீண்டும் இந்தியா நிரூபித்துள்ளது” என குறிப்பிட்டுள்ள இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் சத்யாஞ்சல் பாண்டே, “நமது கதைகள் பின்னிப்பிணைந்துள்ளன. நம் எதிர்காலம் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டது” என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் 76ஆவது குடியரசு தின செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

“இலங்கை இந்தியாவின் ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது.

இந்தியாவும் இலங்கையும் சக ஜனநாயக நாடுகள் மாத்திரமல்ல. நாங்கள் நமது பன்முகத்தன்மை மற்றும் முனைப்புடமை ஆகியவற்றையும் பகிர்ந்துகொள்கின்றோம்.

நாங்கள் நாகரிகம் மிக்க சகாக்கள். எங்கள் வரலாறு, மொழி, மதம், நெறிமுறைகளை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்கின்றோம்.

நமது கதைகள் பின்னிப்பிணைந்துள்ளன. எங்களின் எதிர்காலம் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டது.

எங்கள் புவியியல் ரீதியிலான நெருக்கம் எங்களை இயற்கையான பங்காளிகளாக மாற்றியுள்ளது. அதேவேளை அருகில் இருப்பதால் இரு நாடுகளும் பரஸ்பரம் ஏனைய நாட்டின் நலன்கள் குறித்த உணர்வை கொண்டிருப்பது அவசியமாகிறது.

மேலும், ஒப்பிட முடியாத தன்னிச்சையுடன் மூன்றாம் தரப்பின் அழுத்தங்களால் பாதிக்கப்படாமல் நாம் ஒருவரையொருவர் ஆதரிக்கவேண்டும்.

இந்தியா இலங்கையின் நம்பகமான சகா என்பதை இலங்கையின் நம்பகத்தன்மை மிக்க நண்பர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. இயற்கை பேரிடர்களாக இருக்கலாம், கடலில் ஏற்படும் விபத்துக்களாக இருக்கலாம், கொவிட் பெருந்தொற்றாக இருக்கலாம் அல்லது சமீபத்தைய பொருளாதார நெருக்கடியாக இருக்கலாம்... எதுவாக இருந்தாலும், இந்தியா முதலாவது நாடாக இலங்கைக்கு உதவ விரைந்து முன்வந்துள்ளது.

எங்கள் ஆதரவு உரிய தருணத்தில் விரைவானதாக நிபந்தனையற்றதாக காணப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சந்தேகநபர்களை விடுவிப்பதற்கான சட்டமா அதிபரின் தீர்மானம்...

2025-02-09 09:35:48
news-image

சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின்...

2025-02-09 09:29:03
news-image

14 இந்திய மீனவர்கள் கைது

2025-02-09 09:35:46
news-image

தமிழரசுக்கு எதிரான திருமலை வழக்கு :...

2025-02-08 23:29:29
news-image

ஜனாதிபதி அநுர நாளை எமிரேட்ஸ் செல்கிறார்

2025-02-09 08:57:55
news-image

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்துவத்தை உறுதிப்படுத்துங்கள்...

2025-02-08 23:28:18
news-image

அரசியல் தீர்வை கைவிட்டால் நாடு பாதாளத்தில்...

2025-02-08 23:27:28
news-image

சட்டமா அதிபரை பதவி விலக செய்வதற்கு...

2025-02-08 23:26:12
news-image

கிரிஷ் கட்டிடத்தில் எவ்வாறு தீ பரவியது?...

2025-02-08 23:31:16
news-image

வெளிநாட்டு சேவை நியமனங்களில் அரசியல் மயமாக்கம்...

2025-02-08 23:30:12
news-image

இன்றைய வானிலை

2025-02-09 06:49:28
news-image

ரணில் - சஜித் கூட்டணி பேச்சுவார்த்தை...

2025-02-08 23:33:26