தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் வட மாகாண அமைச்சருமான பொன்னுத்துரை ஐங்கரநேசனின் சகோதரரும் கனடா பல்கலைக்கழக ஆய்வாளருமான பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன் கனடாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஆராய்ச்சிக்காக சென்றிருந்த நிலையில் இயற்கை எய்தியுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆராய்ச்சியொன்றுக்காக கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்றிருந்த நிலையில் ரவிசந்திரநேசன் சனிக்கிழமை (25) மாரடைப்பினால் காலமானார்.
ரவிசந்திரநேசன் அர்த்தமுள்ள சமூக முன்னேற்றத்துக்கான செயற்பாடுகளுக்குள் புலம்பெயர் தேசம், தாயகம் என தீவிர ஆர்வத்துடன் செயற்பட்டவர்.
மேலும் சமூக மாற்றத்துக்கான இடதுசாரி கருத்தியல் செயற்பாட்டின் ஒரு பகுதியாக முற்போக்கு கருத்துக்களை தாங்கிச்செல்லும் மாற்றுக்கருத்தாளர்களின் குரலாக “வைகறை” என்ற பத்திரிகையை நடத்தி “வைகறை ரவி” என அடையாளம் காணப்பட்டவர்.
“பூகோளம்” என்ற பத்திரிகையுடன் ரவிசந்திரநேசன் இணைந்து பணியாற்றியிருந்தார்.
மேலும், இலாப நோக்கமற்ற நிறுவனம் ஒன்றின் உதவியுடன் மூன்றாம் உலக நாடுகளின் சமூக முன்னேற்றத்தினை நோக்கமாக கொண்டு உலகின் பல நாடுகளுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்த ரவிசந்திரநேசன் பல ஆய்வுகளை மேற்கொண்டதுடன் அதனை தாயகத்தினதும் யாழ். பல்கலைக்கழகத்தினதும் செயற்பாட்டுக்கும் செயற்பட முயன்றவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM