வாரியபொல பகுதியில் நீரில் மூழ்கிய இரு சிறுவர்கள் - ஒருவர் உயிரிழப்பு

Published By: Digital Desk 2

26 Jan, 2025 | 11:24 AM
image

வாரியபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிந்தகொல்ல வாவியில் நேற்று சனிக்கிழமை (25) நீராடிக்கொண்டிருந்த இரு சிறுவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய சிறுவன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

13 வயதுடைய, பண்டார கொஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த சிறுவனே உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறான். 

ஹிந்தகொல்ல கிராமத்தில் உள்ள வாவியின் பாதுகாப்பற்ற பகுதியில் நீரில் மூழ்கிய இந்த இரண்டு சிறுவர்களும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னரே ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உயிரிழந்த சிறுவனின் சடலம் வாரியபொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வாரியபொல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணை சுருக்கத்தை; ...

2025-02-10 02:02:13
news-image

இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்களை இனங்கண்டுள்ளோம்; அவர்களுக்கெதிராக...

2025-02-10 01:54:10
news-image

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை ...

2025-02-10 01:46:26
news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20