இந்தியாவுடன் இன்னும் ஒப்பந்தம் கைச்சாத்திடாமையினால் சீன சுத்திரகரிப்பு நிலைய முன்னெடுப்புக்கு பிரச்சினை இல்லை - வெளிவிவகார அமைச்சர்

26 Jan, 2025 | 11:56 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்தினால் முன்மொழியப்பட்டுள்ள குழாய் இணைப்பின் ஊடான எரிபொருள் விநியோக திட்டம் தொடர்பிலான ஒப்பந்தங்கள் இன்னும் நிறைவுபடுத்தபப்படவில்லை என தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், அம்பாந்தோட்டையில் உத்தேசிக்கப்பட்டுள்ள சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய அபிவிருத்தி செயற்றிட்டத்துடன் தொடர்புடைய முழுமையான விபரங்கள் ஒரு மாதத்துக்குள் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

திருகோணமலையை மையப்படுத்தி இந்தியா எரிபொருள் குழாய் இணைப்பு குறித்து இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது. இவ்வாறானதொரு நிலையில் அம்பாந்தோட்டையில் சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நிரமாணிக்கப்படுமாயின் அங்கு நெருக்கடியான சூழல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், இருதரப்புமே முன்வைத்துள்ள திட்டம் ஏற்றுமதி நோக்கத்தை கொண்டது என அரசாங்க தகவல் தினைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது  எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உத்தேசிக்கப்பட்டுள்ள சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய அபிவிருத்தி செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்கு 3.7 பில்லியன் டொலர் நிதியை சீனா முதலீடு செய்கிறது. இந்த செயற்றிட்டத்துக்காக 500 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது. எனினும் மேலும் 200 ஏக்கர் காணியை சீன தரப்பு கோரியுள்ளது. 

இது குறித்து அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை. அதே போன்று திட்டத்துடன் தொடர்புடைய நிபந்தனைகள், வழிகாட்டல்கள், ஏனைய வசதிகள், உள்நாட்டுக்கும் வெளிநாடுகளுக்கு விநியோகிக்கப்படக்கூடிய எரிபொருளின் அளவு மற்றும் எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் போன்ற விபரங்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும் என தெளிவுப்படுத்தினார்.

சீனாவின் ஒரு பாதை ஒரு மண்டலம் முயற்சியில், இந்தியப் பெருங்கடலின் வாசலாக அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம் முக்கிய பங்கை வகிக்கிறது. மலாக்கா நீரிணைப்புக்கு அருகில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம், 36 ஆயிரம் கப்பல்களைக் கையாளும் வசதி கொண்டதாகும். 

சுமார் 4,500 எண்ணெய்க் கப்பல்கள் வந்து செல்லும் துறைமுகமாகும். ஐரோப்பாவுக்குச் செல்லக்கூடிய கப்பல்களுக்கு இந்த துறைமுக பாதை சுமார் மூன்று நாட்கள் பயண நேரத்தைக் குறைக்கக்கூடியது. இதனால், எரிபொருள் தேவையும் கணிசமாகக் குறையும் என்று கூறப்படுகிறது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்து சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அமைப்பதற்கு 15 ஆயிரம் ஏக்கர் காணியை சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையிலேயே அதிநவீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை சீன அம்பாந்தோட்டையில் அமைக்கவுள்ளது. 

ஏற்கெனவே, அம்பாதோட்டையில் அதிநவீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 2019ஆம் ஆண்டு இந்திய - ஓமான் குழுவுடன் இலங்கை அரசாங்கம் ஒப்பந்தம் செய்தது. பிறகு 2023ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தத்தை இரத்து செய்தது. அதன் பின்னரே அம்பாந்தோட்டையில் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிக்க சீனாவை இலங்கை தேர்ந்தெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2025-02-08 23:30:32
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31
news-image

மாத்தறையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2025-02-08 16:17:24
news-image

வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள்...

2025-02-08 15:46:12