யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்த ரயிலில் பாய்ந்து இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆணையிரவு பகுதியிலேயே இன்று அதிகாலை மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் கட்டைக்காடு பகுதியில் உள்ள 55ஆவது படைப்பிரிவின் கடமையாற்றும் நந்தசூரிய என்ற இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.