(நெவில் அன்தனி)
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த விருதுகளில் ஒன்றான 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த ஐசிசி ஆடவர் ரி20 கிரிக்கெட் வீரராக இந்தியாவின் நட்சத்திரம் அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய அமெரிக்காவிலும் கரிபியன் தீவுகளிலும் கடந்த வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா சம்பியனாவதற்கு பெரும் பங்காற்றியவர்களில் அர்ஷ்தீப் சிங்கும் ஒருவராவார்.
பவர் ப்ளே மற்றும் டெத் ஓவர்களில் அசாத்திய திறமையுடன் பந்துவீசி அனைவரினதும் பாராட்டைப் பெற்றிருந்தார்.
ரி20 சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரு உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளராக அர்ஷ்தீப் சிங் கடந்த வருடம் தன்னை நிலைநிறுத்திக்கொண்டர்.
தான் பங்குபற்றிய சகல போட்டிகளிலும் டெத் ஓவர்களில் மிகத் திறமையாக பந்துவீசியதுடன் விக்கெட்களையும் தாராளமாக வீழ்த்தியிருந்தார்.
கடந்த வருடம் 18 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் மாத்திரம் விளையாடிய அர்ஷ்தீப் சிங் 36 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அவரது சராசரி 15.31 ஆக இருந்ததுடன் ஸ்ட்ரைக் ரேட் 10.80ஆகும். அவரது எக்கொனொமிக் ரேட் 7.49 ஆக இருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM