(எம்.மனோசித்ரா)
நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியும்.
எவ்வாறிருப்பினும் ஏப்ரலுக்குள் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நம்புவதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2023ஆம் ஆண்டு கோரப்பட்ட வேட்புமனுவை இரத்து செய்து 2024ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கமைய புதிய வேட்புமனுவை கோருவதற்கான திருத்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நீதிமன்றத்தில் 4 தரப்புக்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்புக்கமையவே உள் ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
நீதிமன்ற தீர்ப்பு கிடைத்த பின்னர் பாராளுமன்றத்தில் இரண்டாம் மூன்றாம் வாசிப்புக்களின் பின்னர் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். சபாநாயகர் கையெழுத்திட்டதன் பின்னர் குறித்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
அதன் பின்னரே தேர்தல் ஆணைக்குழுவால் அதற்குரிய தினத்தை தீர்மானிக்க முடியும். எவ்வாறிருப்பினும் ஏப்ரலுக்குள் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு கிட்டும் என்று நம்புகின்றோம்.
பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 1064 வேட்பாளர்கள் தமது செலவு அறிக்கையை சமர்ப்பிக்க தவறியதால் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களுக்கு தேவையான நிதி தொடர்பான மதிப்பீட்டை திறைசேரிக்கு அனுப்பி வைத்திருக்கின்றோம்.
அதற்கமைய வரவு - செலவு திட்டத்தில் அதற்குரிய நிதி ஒதுக்கப்பட்டு தேர்தலின் போது ஆணைக்குழுவுக்கு வழங்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM