(எம்.மனோசித்ரா)
நாட்டில் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மூடி ஓரங்கட்டப்பட்டிருந்த ஊழல், மோசடி விசாரணைக் கோப்புக்கள் மீளத் திறக்கப்பட்டுள்ளன.
அந்த வகையிலேயே சமூகத்தில் முக்கிய புள்ளிகள் எனக் கூறப்படுபவர்கள் கைது செய்யப்படுகின்றனர். மாறாக இது அரசியல் பழிவாங்கல் அல்லவென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று சனிக்கிழமை (25) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சுமார் 15 ஆண்டுகளின் பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் வழக்கு தாக்கல் மற்றும் விசாரணைகள் எவ்வாறு இடம்பெற்றுள்ளன் என்பது தற்போது தெளிவாகிறது.
கடந்த அரசாங்கங்களில் அங்கத்துவம் வகித்தவர்களுடன் தொடர்புடைய ஊழல், மோசடிகள் குறித்த கோப்புக்கள் இத்தனை ஆண்டுகளாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
ஆனால் தற்போது அவை மீளத் திறக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாகவே தொடர்ச்சியாக சமூகத்தில் முக்கிய புள்ளிகள் எனக் கூறப்படுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றன.
இவை எமது தேவைக்காக முன்னெடுக்கப்படுபவை அல்ல. மஹிந்த ராஜபக்ஷவின் மகன் என்பதற்காக இதனை அரசியல் பழிவாங்கல் எனக் கூற முடியாது.
பிணை கிடைத்தாலும் வழக்கு விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். அதற்கமைய சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் விவகாரத்தில் பொலிஸார் முறையாக செயற்படவில்லை எனக் கூற முடியாது. ஆனால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் சில குறைபாடுகள் ஏற்படுகின்றன.
எவ்வாறிருப்பினும் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டோரை பாதுகாப்பதற்கு எமது அரசாங்கம் ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM