முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷனவிற்கு எதிரான வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேக நபரை 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று சனிக்கிழமை (25) உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
2014 ஆம் ஆண்டு வெள்ள நிவாரணத்திற்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 6.1 மில்லியன் ரூபா பணத்தை தேர்தல் பிரசாரங்களுக்கு தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா , அவரது மனைவி மற்றும் மேலும் ஆறு பேர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரது மனைவியும் உட்பட நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்குடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM