நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காகவும் தொலைதூர பயணங்களுக்காகவும் புதிய ரயில் சேவைகளை அறிமுகம் செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மலையக பகுதிகள் தொடர்பில் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் உள்ள ஈர்ப்பு மற்றும் பல்வேறு கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதத்திலிருந்து எல்ல ஒடிசி - கண்டி மற்றும் எல்ல ஒடிசி - நானு ஓயா ஆகிய இரண்டு புதிய ரயில்கள் சேவைகளை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கண்டிக்கான எல்ல ஒடிசி ரயில் சேவை பெப்ரவரி மாதம் 01ஆம் திகதியிலிருந்து ஒவ்வொரு வார இறுதியிலும் கண்டி மற்றும் தெமோதரைக்கு இடையில் இயக்கப்படும்.
நானுஓயாவுக்கான எல்ல ஒடிசி ரயில் சேவை பெப்ரவரி மாதம் 10ஆம் திகதியிலிருந்து நானுஓயா மற்றும் பதுளைக்கு இடையில் இயக்கப்படும்.
கொழும்பு - பதுளைக்கான எல்ல ஒடிசி ரயில் சேவை பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதியிலிருந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் கொழும்பிலிருந்து பதுளைக்கு இயக்கப்படும்.
பதுளை - கொழும்புக்கான எல்ல ஒடிசி ரயில் சேவை பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதியிலிருந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் பதுளையிலிருந்து கொழும்புக்கு இயக்கப்படும்.
மேலும், எதிர்வரும் 31ஆம் திகதியிலிருந்து கொழும்பு - காங்கேசன்துறை இரவு நேர தபால் ரயில் சேவைகள் தினமும் இயங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM