அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் தமிழ் வழி எண் கணித பெயர் சூட்டல்

Published By: Digital Desk 2

25 Jan, 2025 | 04:24 PM
image

டிஜிட்டல் மயமாகி வரும் இந்த யுகத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய பெயர் தான் முதன்மையான அடையாளமாக கருதப்படுகிறது. இந்த பெயர் பிறக்கும் போதிலிருந்து இறக்கும் வரை அவருடன் இணைந்தே பயணிப்பதால் பெயர் சூட்டப்படுவதை சற்று துல்லியமாக அவதானிக்க வேண்டும் என எம்முடைய முன்னோர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். 

நீங்கள் பிறந்த நாள்,  பிறந்த மாதம், பிறந்த ஆண்டு, பிறந்த கிழமை, பிறந்த நேரம், பிறந்த இடம், ஆகியவற்றை துல்லியமாக அவதானித்து, அதற்கேற்ப ஆயுள் முழுவதும் நற்பலன்களை அள்ளி வழங்கும் வகையில் பெயரை தெரிவு செய்ய வேண்டும். 

இதற்கு முன்னர் மேலைத்தேய நாட்டினர் அறிமுகப்படுத்திய எண் கணித முறையில் தான் பெயர்களை சூட்டினோம் . ஆனால் பலரும் எதிர்பார்த்த அளவிற்கு பாரிய வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக எம்முடைய ஆன்மீக முன்னோர்களும் , சோதிட நிபுணர்களும் தமிழ் வழி எண் கணித முறையில் உங்களது பெயரை மாற்றி அமைத்துக் கொண்டால் மீதமுள்ள வாழ்க்கையை வெற்றிகரமாக கழிக்கலாம் என உறுதிபட கூறுகிறார்கள்.

உடனே எம்மில் சிலர் மேலைத்தேய எண் கணித முறைக்கும், எம்முடைய தமிழ் என் கணித முறைக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? என அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவர்.

மேலத்தேய எண் கணிதம் குறித்து இணையத்தில் தேடினால் ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்குரிய எண்கள் கிடைக்கும்.  சிலருக்கு இதன் அடிப்படையில் பெயர் சூட்டும் போது வெற்றியும் கிடைக்கலாம். ஆனால் உலக தமிழர்களுக்கு தமிழ் வழி எண் கணித முறையில் பெயரையும், அவர்களது வணிக நிறுவனத்திற்கான பெயரையும் தெரிவு செய்து சூட்டினால் வெற்றி உறுதி என சோதிட நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

தமிழ் எண் கணித முறையில் நவ கிரகங்களுக்கான எண்களை காண்போம்.

சூரியன் -1

சந்திரன்-  2

செவ்வாய் - 3

ராகு - 4

குரு - 5

சனி - 6

புதன்-  7

கேது-  8

சுக்ரன் - 9

உங்களுடைய பிறந்த திகதி, மாதம் , ஆண்டு, ஆகியவற்றை எழுதி, அதனை கூட்டி ,ஒற்றை இலக்கமாக மாற்றி, எந்த எண் வருகிறதோ அந்த எண்ணுக்குரிய கிரகம், உங்களுடைய ஜாதகத்தில் கிரக வலிமையை பெற்றிருந்தால், அந்த கிரகம் தான் உங்களின் வெற்றிக்கான, வெற்றியை அள்ளித் தரும் கிரகமாகும். அந்த கிரகத்திற்குரிய அந்த கிரகத்தின் பொருளை வழங்கக்கூடிய  பெயரை நீங்களும், நீங்கள் தொடங்கும் வணிக நிறுவனத்திற்கும் சூட்டினால் வெற்றி உறுதி.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முருகனின் அருளை பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-02-06 17:20:36
news-image

நினைத்த காரியத்தை நடத்தி தரும் தேங்காய்...!!?

2025-02-05 23:15:14
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்கும் சூட்சம...

2025-02-03 16:17:32
news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை..?

2025-02-01 20:35:36
news-image

விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்...

2025-01-31 22:24:19
news-image

கடனுக்கு தீர்வு காண்பதற்கான சூட்சமம்..?

2025-01-31 17:12:14
news-image

தோஷத்தை நீக்குவதற்கான தீப வழிபாடு மேற்கொள்வது...

2025-01-30 14:26:15
news-image

சூரிய பகவானின் பரிபூரண ஆசி கிடைப்பதற்கான...

2025-01-29 20:43:33
news-image

செல்வத்தை அதிகரிப்பதற்கான பிரத்தியேக விருட்ச வழிபாடு

2025-01-27 13:09:12
news-image

அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் தமிழ் வழி எண்...

2025-01-25 16:24:32
news-image

தீபம் ஏற்றுவதில் கவனம் தேவையா..?

2025-01-24 16:44:40
news-image

வெற்றியை உண்டாக்கும் மந்திர வழிபாடு

2025-01-23 16:12:37