மெரால்ஜியா பரேஸ்டெடிகா எனும் தொடை பகுதியில் ஏற்படும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

Published By: Digital Desk 2

25 Jan, 2025 | 04:23 PM
image

தற்போதைய இளம் தலைமுறையினர் மேலத்தேய கலாச்சாரத்தை பின்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக இறுக்கமான ஆடைகளை அணிவதை பெசன் என கருதுகிறார்கள். இதன் காரணமாக சிலருக்கு தொடையின் வெளிப்பகுதியில் திடீரென்று உணர்வின்மை பாதிப்பு ஏற்படுகிறது.  இதனை மருத்துவ மொழியில் மெரால்ஜியா பரேஸ்டெடிகா என குறிப்பிடுகிறார்கள். இதற்கு நவீன சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

தொடையின் வெளிப்பகுதியில் கூச்ச உணர்வு, உணர்வின்மை, எரிச்சலுடன் கூடிய வலி , நடைப்பயிற்சி மேற்கொண்ட பிறகு தொடை பகுதியில் வலியும் எரிச்சலும் அதிகமாவது, இடுப்பு பகுதியில் அழுத்தம் ஏற்படுவது போல் உணர்வது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு சென்று வைத்தியர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.

இறுக்கமான ஆடைகள், உடல் பருமன், அடிவயிற்றில் விவரிக்க இயலாத காரணங்களால் திரவம் குவிந்து அழுத்தம் அதிகரிப்பது, நரம்பு பகுதியில் காயங்கள் ஏற்படுவது, சத்திர சிகிச்சையின் காரணமாக தசை நார் பகுதியில் வடு ஏற்பட்டிருப்பது என பல்வேறு காரணங்களால் மெரால்ஜியா பரேஸ்டெடிகா எனும் பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

இவர்களை பரிசோதிக்கும் வைத்தியர்கள் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எலக்ட்ரோமயோகிராபி, நரம்பு திறன் பரிசோதனை, நரம்பு அடைப்பு தொடர்பான பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்வார்கள்.

இத்தகைய பரிசோதனையின் முடிவின் அடிப்படையில் பாதிப்பினை துல்லியமாக அவதானித்து, நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் கண்டறியப்பட்டிருக்கும் பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை ஊசி மூலம் செலுத்தி நிவாரணம் வழங்குவர். வெகு சிலருக்கே சத்திர சிகிச்சை மூலம் இதற்கான நிவாரணத்தை அளிப்பார்கள்.

வைத்தியர் வேணி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீண்டும் மீண்டும் ஏ என் ஏ...

2025-02-08 11:08:22
news-image

தனி பிரிவாக வளர்ச்சி அடைந்து வரும்...

2025-02-06 18:23:31
news-image

புளித்த ஏப்பம் எனும் பாதிப்பிற்கான நிவாரண...

2025-02-05 17:36:36
news-image

புளூரல் எஃபியூஸன் எனும் நுரையீரலில் ஏற்படும்...

2025-02-03 16:01:24
news-image

தோள்பட்டை வலிக்கு உரிய நிவாரண சிகிச்சை

2025-02-01 20:35:14
news-image

யூஸ்டாச்சியன் குழாய் செயலிழப்பு எனும் காதில்...

2025-01-30 14:26:30
news-image

தழும்புகளில் ஏற்படும் வலிக்கான நிவாரண சிகிச்சை

2025-01-29 20:45:31
news-image

செர்வியோஜெனிக் தலைவலி பாதிப்புக்கான சிகிச்சை 

2025-01-27 19:26:02
news-image

மெரால்ஜியா பரேஸ்டெடிகா எனும் தொடை பகுதியில்...

2025-01-25 16:23:10
news-image

போஸ்ட் வைரல் ஓர்தரைடீஸ் எனும் காய்ச்சலுக்கு...

2025-01-22 17:01:32
news-image

வாய் வறட்சி எனும் உலர் வாய்...

2025-01-21 15:19:43
news-image

செபோர்ஹெக் டெர்மடிடிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2025-01-20 17:51:49