ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் நடிகர் மாதவன்..!?

Published By: Digital Desk 2

25 Jan, 2025 | 04:23 PM
image

பான் இந்திய நட்சத்திர நடிகரான மாதவன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' ஹிசாப் பராபர் ' எனும் திரைப்படம் ஜீ 5 எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

பொலிவுட் இயக்குநர் அஸ்வினி திர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஹிசாப் பராபர் ' எனும் திரைப்படத்தில் ஆர் .மாதவன் , நில் நிதின் முகேஷ், கீர்த்தி குல்ஹாரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இதனை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் எஸ்பி சினி கொர்ப் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. 

அவல நகைச்சுவையுடன் அரசியலை மையப்படுத்திய இந்த திரைப்படம், இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு டிஜிட்டல் தளமான ஜீ 5 எனும் டிஜிட்டல் தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஐனவரி 24 ஆம் திகதி முதல் வெளியாகி இருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' புகையிரத நிலைய நுழைவு சீட்டு பரிசோதகரான ராதே மோகன் சர்மா ( ஆர். மாதவன்) பணியின் போது எதிர்பாராத விதமாக ஒரு பெரிய வங்கி மோசடியினை கண்டறிகிறார். அதனை விசாரிக்க தொடங்கும் போது எதிர்பாராத விதமாக இரக்கமற்ற வங்கியாளரின் அச்சுறுத்தல் மற்றும் சதியை எதிர்கொள்கிறார். 

இதனால் அவருடைய நேர்மைக்கும், அவரை சுற்றியுள்ளவர்களுக்கும் கடும் அதிர்ச்சி ஏற்படுகிறது. இருப்பினும் ஊழலுக்கு எதிராக தன்னுடைய குரலை பதிவு செய்வதற்காக ராதே மோகன் சர்மா எம்மாதிரியான முடிவினை மேற்கொள்கிறார் என்பதை இப்படம் விவரிக்கிறது'' என்றார்.

இதனிடையே ஆர். மாதவன் நடிப்பில் 'ஹிசாப் பராபர்' வெளியாகி இருப்பதால் தென்னிந்திய ரசிகர்களிடத்திலும் இந்த திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right