தெற்கு அதிவேக வீதியில் வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்த  களனிகம - தொடாங்கொடைக்கு இடையிலான வீதி மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.

இதனால் தெற்கு அதிவேக வீதியின் கடவத்தை தொடக்கம் கொக்மாதுவ வரையில் வாகனங்கள் பயணிக்க முடியும் எனவும், கொக்மாதுவவில் இருந்து கொடகம வரையிலான வீதி தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை நெடுஞ்சாலைகள் நடவடிக்கை பணிப்பாளர் எஸ். ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.