இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட 'ட்ராமா' படத்தின் இரண்டாவது பாடல்

Published By: Digital Desk 2

25 Jan, 2025 | 03:52 PM
image

தேசிய விருது பெற்ற பின்னணி பாடகியான சித்ராவின் குரலில் உருவான 'தாலிலோ தாலாலீலோ..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை இசையமைப்பாளர்கள் டி. இமான் - யுவன் சங்கர் ராஜா மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் உருவாகி வரும் ' ட்ராமா' எனும் திரைப்படத்தில் விவேக் பிரசன்னா, வி ஜே பிராது , பூர்ணிமா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அஜித் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆர். எஸ். ராஜ் பிரதாப் இசையமைத்திருக்கிறார். 

இந்த திரைப்படத்தை டெர்ம் புரொடக்ஷன் ஹவுஸ் என்னும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். உமா மகேஸ்வரி தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் 'தாலிலோ தாலாலிலோ தாலாட்டு நானும்..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இந்த பாடலை பாடலாசிரியர் மகேஷ் பாலகிருஷ்ணன் எழுத, பின்னணி பாடகி கே. எஸ். சித்ரா மற்றும் பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான ஆர். எஸ். ராஜ் பிரதாப் ஆகிய இருவரும் இணைந்து பாடியிருக்கிறார்கள்.  தாலாட்டு பாடல் வகையில் உருவான இந்தப் பாடலில் சித்ராவின் வசீகரிக்கும் குரல் ரசிகர்களை தாலாட்ட வைக்கிறது. இதனால் இந்த பாடலுக்கு பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right