2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் ரி20 சிறப்பு அணியிலும் சமரி அத்தபத்து

25 Jan, 2025 | 03:24 PM
image

(நெவில் அன்தனி)

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இன்று வெளியிடப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் சர்வதேச ரி20 சிறப்பு அணியிலும் இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த அணியில் கடந்த வருடம் மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்தியவர்களும் மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பிரகாசித்தவர்களும் பெயரிடப்பட்டுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நேற்று வெளியிடப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சிறப்பு அணியிலும் சமரி அத்தபத்து பெயரிடப்பட்டிருந்தார்.

ஐசிசி மகளிர் சர்வதேச ஒருநாள் அணிக்கு தலைவியாக நியமிக்கப்பட்டிருந்த லோரா வுல்வாட், மகளிர் 20 அணிக்கும் தலைவியாக பெயரிடப்பட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் அணியில் பெயரிடப்பட்டுள்ள சமரி அத்தபத்து, கடந்த வருடம் 21 மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 720  ஓட்டங்களைப் பெற்றார். இதில் ஒரு சதம், 4 அரைச் சதங்கள் அடங்கியிருந்தன.

பந்துவீச்சில் 21 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் சிறிப்பு அணி (துடுப்பாட்ட வரிசையில்)

லோரா வுல்வாட் (தலைவி - தென் ஆபிரிக்கா), ஸ்ம்ரித்தி மந்தனா (இந்தியா), சமரி அத்தபத்து (இலங்கை), ஹேலி மெத்யூஸ் (மேற்கிந்தித் தீவுகள்), நெட் சிவர்-ப்ரன்ட் (இங்கிலாந்து), அமேலியா கேர் (நியூஸிலாந்து), ரிச்சா கோஷ் (விக்கெட் காப்பாளர்), மாரிஸ்ஆன் கெப் (தென் ஆபிரிக்கா), ஓலா ப்ரெண்டகாஸ்ட் (அயர்லாந்து), தீப்தி ஷர்மா (இந்தியா), சாதியா இக்பால் (பாகிஸ்தான்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11
news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20
news-image

14 வயதின் கீழ் பாடசாலை சமபோஷ...

2025-02-09 11:13:16
news-image

மூத்த வீரர்களுக்கான கால்பந்தாட்ட சமரில்; எட்டு...

2025-02-08 20:52:34
news-image

திமுத் கருணாரட்னவின் கடைசித் துடுப்பாட்டம்; நாளை...

2025-02-08 20:49:02
news-image

இலங்கைக்கு எதிரான தொடரில் முழுமையான வெற்றியின்...

2025-02-08 20:46:18
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை...

2025-02-08 21:05:32
news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12
news-image

ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர்,...

2025-02-07 17:05:20