கடந்த 2024 ஆம் ஆண்டில் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 132 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா இது தொடர்பில் தெரிவிக்கையில்,
சட்டவிரோதமாக இயங்கி வரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களில் இடம்பெறும் பண மோசடிகள் தொடர்பில் 2023 ஆம் ஆண்டில் 3,675 முறைப்பாடுகளும் 2024 ஆம் ஆண்டில் அது 4,658 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
மேலும் கடந்த ஆண்டில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களில் இடம்பெறும் பண மோசடிகள் தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM