கல்கிஸை பொலிஸ் பிரிவிட்குட்பட்ட விமலசிறி டி மெல் பகுதியில் பல்வேறு வகையான போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை வைத்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நேற்று வெள்ளிக்கிழமை (24) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளை சேனநாயக்க மாவத்தையில் வசிக்கும் 29 வயதுடைய நபராவார்.
சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் வழிகாட்டலின் கீழ் போதைப்பொருளை விற்பனை செய்யும் வர்த்தகர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேக நபரிடம் கைப்பற்றப்பட்ட பொருட்கள் ;
3 கிலோகிராம் மற்றும் 349 கிராம் ஹேஷ்
25 கிராம் குஷ் கஞ்சா
30 கிராம் மாண்டி (செயற்கை இரசாயன மருந்து)
320 போதை மாத்திரைகள்
129 முத்திரைகள் (LSD)
1 துப்பாக்கி
2 வாள்கள்
1 பொலித்தீன் சீலர்
5 மின் தராசு
4,000 போதைப்பொருளை பொதி செய்யும் பக்கற்றுக்கள்
1250 ரூபாய் பணம்
1 கைத்தொலைபேசி
1 கார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM