மலேசிய பினாங்கில் 17வது எடிசன் தமிழ் திரை விருதுகள்

25 Jan, 2025 | 09:34 AM
image

உலகத் தமிழர்களால் இணையம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் வாக்குகள் பெற்று விருது வழங்கும் விழா எதிர்வரும் ஏப்ரல் மாதம் சனிக்கிழமை (05) ஆம் திகதி மாலை பினாங்கு மாநிலத்தில் உள்ள SPICE ARENA அரங்கில், பினாங்கு மாநில ஆட்சி குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூ பரிந்துரையின் பெயரில் பினாங்கு மாநில அரசு அனுசரணையுடன் நடைபெற உள்ளது.  

இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளில் உள்ள பண்பலை ரேடியோ, தினசரி நாளிதழ், தொலைக்காட்சி மற்றும் இணையதளங்கள் மூலம் வாக்குகளை பெற்று பெரிது வழங்கப்பட உள்ளது.

இந்நிகழ்வின் தேர்வு பட்டியலில் 33 வரிசையில் தேர்ந்தெடுக்கப்படும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் பின்னணி பாடகர்கள், பாடல் ஆசிரியர்கள், கேமராமேன்கள், எடிட்டர்கள், நடன இயக்குனர்கள் என பல வரிசையில் தேர்வு நடைபெற உள்ளது.

இத்தேர்வு பட்டியலில் இடம்பெற 2024 ஜனவரி 1ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை தியேட்டர் மற்றும் OTT தளங்களில் வெளியீடு கண்ட திரைப்படங்கள் தேர்வு பட்டியலில் இடம்பெறவுள்ளன. 

இந்நிகழ்வில் விருது மற்றும் கலை நிகழ்ச்சிகள், நகைச்சுவை நிகழ்வு, இந்திய கலைஞர்களுடன், மலேசிய கலைஞர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை படைக்க உள்ளனர்.

எடிசன் திரை விருதுக்கான Curtain Raiser விரைவில் சென்னையிலும் ,பத்திரிக்கையாளர் சந்திப்பு இலங்கை மற்றும் பல்வேறு நாடுகளில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளில் உள்ள தொலைக்காட்சி பிரபலங்கள் புலம்பெயர் தமிழர்கள் கலை ஆர்வலர்கள் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர் என எடிசன் விருது குழு தலைவர் செல்வகுமார் தெரிவித்தார் தொடர்புக்கு +60166167708 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right