சேருவில - தங்கநகர் பகுதியில் நிறுத்தியிருந்த டிமோ பட்டா வாகனத்துடன் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து சம்பவம் வெள்ளிக்கிழமை (24) மாலை இடம் பெற்றுள்ளது.
காத்தான்குடியில் இருந்து திருகோணமலை நோக்கி 10 பேருடன் பயணித்த வேன் திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் தங்கநகர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்கு முன்னால் வீதி ஓரமாக தரித்து நின்ற டிமோ பட்டா வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமுற்ற 2 குழந்தைகள், 3 பெண்கள் மற்றும் 1 ஆண் உள்ளிட்ட 6 பேர் சேருவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வேனில் 2 குழந்தைகள் உட்பட 6 பெண்களும், 2 ஆண்களும் பயணம் செய்திருந்தனர்.
சாரதியின் தூக்கமே விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகின்றது. மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM