(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் புதிய தலைவராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தெரிவு செய்யப்பட்டார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு முதல் தடவையாக வெள்ளிக்கிழமை (24) கூடியபோதே அவர் இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டார்.
தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத்னவின் பெயரை தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் குமார நவரத்ன வழிமொழிந்தார்.
குழு முன்னிலையில் உரையாற்றிய குழுவின் தலைவர் குறிப்பிடுகையில், நாட்டை பாரிய நிதி நெருக்கடியிலிருந்து மீட்டு சரியான திசையை நோக்கி கொண்டு செல்லும் சவாலை சமாளிக்க அனைவரின் அர்ப்பணிப்பையும் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
குழு தனது எதிர்காலப் பணிகளை பாரபட்சமின்றியும் சுதந்திரமாகவும் மேற்கொள்ள எதிர்பார்க்கிறது என்றும், சரியான முடிவுகளை
அச்சமின்றி எடுத்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தயங்காது என்றும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM