(எம்.மனோசித்ரா)
மாகாணசபைத் தேர்தலை துரிதமாக நடத்துவதற்குரிய சட்ட திருத்தங்கள் விரைவாக மேற்கொள்ளப்படும் என மாகாணசபைகள், உள்ளுராட்சி மற்றும் பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டு 17ஆம் இலக்க மாகாணசபை சட்டத்தில் புதிய கலப்பு முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்ற அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
அதனை நடைமுறைப்படுத்துவதற்காக எல்லை நிர்ணயம் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், எனினும் அது பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய தற்போதைய சூழ்நிலையில், முந்தைய முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை மீண்டும் நடத்துவதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பழைய முறையின்படி, மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாயின் 1988 மாகாணசபை தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கமையவே நடத்த வேண்டும். அதன்படி, இந்த விவகாரம் தொடர்பான ஒரு குறிப்பாணை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் மாகாணசபைத் தேர்தலை ஆகஸ்ட் மாதத்தில் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM