புகையிரத ஆசனங்களை இணையத்தில் முன்பதிவு செய்து அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்ற புகையிரத திணைக்களத்தின் தொழில்நுட்ப உதவியாளர் உட்பட மூவர் வெள்ளிக்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவிகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 34-44 வயதுடைய கண்டி,மாத்தளை மற்றும் உக்குவளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றன.
இலங்கை ரயில்வே திணைக்களம் மற்றும் இலங்கை மொபிடெல் இணைந்து இணையதளத்தில் புகையிரத ஆசனங்களை முன்பதிவு செய்வதற்கு பயன்படுத்தப்படும் கணினி முறைமையில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட புகையிரத பயணச்சீட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் மூவரும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், அதன் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் திலக் சமரநாயக்க உள்ளிட்ட குழுவினர் புதன்கிழமை (22) பிற்பகல் முச்சக்கரவண்டி சாரதியை கைது செய்ததுடன், அவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலும் மோசடியில் ஈடுபட்டுள்ள பலரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு குறித்த சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM