யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஊழியர் சங்கமும் ஆதரவு!

Published By: Vishnu

24 Jan, 2025 | 08:47 PM
image

மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி, நான்கு அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் வெள்ளிக்கிழமை (24) வெள்ளிக்கிழமை காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் இந்த போராட்டத்திற்கு அறிக்கை ஒன்றின் மூலம் ஆதரவு வழங்கியுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

பல்கலைக்கழக மாணவர்களே நாளைய எமது சமுதாயத்தின் தூண்கள். பல்கலைக் கழகங்கள் எமது சமுதாயத்தின் நீண்ட கால வளர்ச்சியினை நோக்காககக் கொண்டு செயற்பட வேண்டும். இருப்பினும் அண்மைக் காலங்களில் சமூகத்திற்கு அர்ப்பணிப்பு மிக்கவர்களாகவும், வினைத்திறன் உள்ளவர்களாகவும் மாணவர்களை வலுப்படுத்துவதில் பல்கலைக் கழகங்கள் பின் தங்கிவிட்டதாக எமது சமுதாயத்தில் கருத்து நிலவி வருகின்றது.

எமது பல்கலைக்கழகம் எப்பொழுதும் மாணவர்கள் நலன் சார்ந்தே தனது தீர்மானங்களை எடுத்து வருகின்றது என்பது வரலாறு இனியும் அது தொடர வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 24/01/2025 வெள்ளிக்கிழமை முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்விடயத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் அசமந்தமாகச் செயற்படுவது எமக்கு வேதனையை தருகின்றது.

எனவே மாணவர்களின் சாத்வீக முறையான இப்போராட்டம் வெற்றி பெற அவர்களின் கோரிக்கைகளை வெளிப்படைத்தன்மையுடன், உரிய சட்டதிட்டங்களுக்கமைய, நீதியாக, காலந்தாழ்த்தாது விரைவில் தீர்த்துவைக்குமாறும் கேட்டுக்கொண்டு, பல்கலைக்கழக ஊழியர் சங்கமாகிய நாமும் அவர்களுக்கு உறுதுணையாக நிற்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணை சுருக்கத்தை; ...

2025-02-10 02:02:13
news-image

இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்களை இனங்கண்டுள்ளோம்; அவர்களுக்கெதிராக...

2025-02-10 01:54:10
news-image

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை ...

2025-02-10 01:46:26
news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20