ராகலையின் மையப் பகுதியில் உள்ள பச்சத்தண்ணி மாரியம்மன் கோவில் கலாசார பாரம்பரியம் மற்றும் ஆன்மிக செழிப்பின் அடையாளமாக உள்ளது.
பல ஆண்டுகளாக இந்த கோயில் நம்பிக்கையின் ஒளியாகவும் சமூகத்தினை ஒருங்கிணைக்கும் சக்தியாகவும் எண்ணற்ற பக்தர்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் வழங்கும் புனித மையமாகவும் திகழ்கிறது.
12 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த கோவிலை மறு சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை கோவில் நிர்வாகம் ஆரம்பிக்கவுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட கோயில், வழிபாட்டுக்கான அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதோடு, வருங்கால தலைமுறையினருக்கு நீடித்த பாரம்பரியத்தை நிலைநாட்ட வழிவகுக்கும்.
APIIT ரோட்ராக்ட் கழகம் "தைத்திருநாள் 25" திட்டத்தின் மூலம் இந்த கோயிலின் மறுசீரமைப்பு பணிகளுக்கான நிதி உதவியை சேகரித்து வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
நிதி உதவி அல்லது வேறு ஏதேனும் உதவிகளை வழங்குவதன் மூலம் தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் நிறுவனங்களை இந்த உன்னத செயலில் எங்களுடன் இணைய ஊக்குவிக்கிறோம்.
நீங்கள் வழங்கக்கூடிய எந்தவொரு நன்கொடையும் கோவிலின் திருப்பணிக்கு பாரிய பங்களிப்பாக அமையும். நன்கொடையாளர்கள் தைப்பொங்கல் கொண்டாட்டங்களின்போது மற்றும் பல்வேறு விளம்பர தளங்களில் அங்கீகாரத்தைப் பெறுவார்கள்.
இந்த புனித இடத்தை புனரமைக்கவும் தாராள மனப்பான்மையை போற்றவும் ஒன்றிணைவோம் என APIIT ரோட்ராக்ட் கழகத்தின் தலைவர் ஷகான் தேவராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM