(நெவில் அன்தனி)
டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் கடந்த வருடம் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய வீரர்களைக் கொண்ட 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் சிறப்பு அணியில் இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் கமிந்து மெண்டிஸ் பெயரிடப்பட்டுள்ளார்.
கமிந்து மெண்டிஸ் கடந்த வருடம் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 சதங்கள், 3 அரைச் சதங்களுடன் 1049 ஓட்டங்களைக் குவித்திருந்தார். அவர் 7 டெஸ்ட் போட்டிகளில் 8 தடவைகள் 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்று சாதனை நிலைநாட்டியிருந்தார்.
வருடத்தின் ஐசிசி டெஸ்ட கிரிக்கெட் அணிக்கு அவுஸ்திரேலியாவின் பெட் கமின்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் குழாம் (துடுப்பாடட வரிசையில்)
யஷஸ்வி ஜய்ஸ்வால் (இந்தியா), பென் டக்கெட் (இங்கிலாந்து), கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து), ஜோ ரூட் (இங்கிலாந்து), ஹெரி ப்றூக் (இங்கிலாந்து),கமிந்து மெண்டிஸ் (இலங்கை), ஜெமி ஸ்மித் (விக்கெட் காப்பாளர் - இங்கிலாந்து), ரவிந்த்ர ஜடேஜா (இந்தியா), பெட் கமின்ஸ் (தலைவர் - அவுஸ்திரேலியா), மெட் ஹென்றி (நியூஸிலாந்து), ஜஸ்ப்ரிட் பும்ரா (இந்தியா).
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM