(நெவில் அன்தனி)
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாத்தில் இளம் சகலதுறை வீரர் சொனால் தினுஷ முதல் தடவையாக பெயரிடப்பட்டுள்ளார்.
தனஞ்சய டி சில்வா தொடர்ந்தும் அணித் தலைவராக செயற்படவுள்ளார்.
மஹநாம கல்லூரி அணி, 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி ஆகியவற்றின் முன்னாள் வீரரான 24 வயதான சொனால் தினுஷ, கடந்த 7 வருடங்களாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருவதுடன் சிறந்த சகலதுறை வீரராவார்.
அவர் 44 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 6 சதங்கள், 12 அரைச் சதங்களுடன் 2285 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் 94 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிராக இலங்கை ஏ அணியில் விளையாடிய சோனால் தினுஷ 145 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.
சிரேஷ்ட வீரர்களும் முன்னாள் தலைவர்களுமான ஏஞ்சலோ மெத்யூஸ், திமுத் கருணாரட்ன, தினேஷ் சந்திமால் ஆகியோர் தொடர்ந்து விளையாடவுள்ளனர்.
உபாதைக்குள்ளான பெத்தும் நிஸ்ஸன்க குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளபோதிலும் அவர் உடற்தகுதியை நிரூபித்தால் மாத்திரமே டெஸ்ட் அணியில் இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் விளையாடாவிட்டால் ஓஷத பெர்னாண்டோ ஆரம்ப விரராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச ரி20 கிரிக்கெட் அரங்கில் ஒரே ஒரு போட்டியில் மாத்திரம் விளையாடியுள்ள லஹிரு உதாரவும் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளார்.
டெஸ்ட் குழாம்
தனஞ்சய டி சில்வா (தலைவர்), திமுத் கருணாரட்ன, பெத்தும் நிஸ்ஸன்க (உடற்தகுதியைப் பொறுத்து), குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மெத்யூஸ், ஓஷத பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, லஹிரு உதார, சொனால் தினுஷ, ப்ரபாத் ஜயசூரிய, நிஷான் பீரிஸ், ஜெவ்றி வெண்டசே, மிலான் ரத்நாயக்க, விஷ்வா பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, லஹிரு உதார.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM