அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகைகள் குறித்து விசேட சுற்றுநிரூபம்

24 Jan, 2025 | 04:54 PM
image

(எம்.மனோசித்ரா)

அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான வாகனங்கள், எரிபொருள், தொலைபேசி மற்றும் ஏனைய சலுகைகள் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் என்.எஸ்.குமாரநாயக்கவினால் விசேட சுற்று நிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்று நிரூபத்தில் செயலாளர்கள் உட்பட ஏனைய உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கான வரையறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் தமது அரச கடமைகளுக்காக ஆகக் கூடியது இரு உத்தியோகபூர்வ வாகனங்களை மாத்திரமே பயன்படுத்த முடியும். அந்த வாகனங்களுக்காக மாதாந்தம் 900 லீற்றர் எரிபொருள் ஒதுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு இரு அலுவலக தொலைபேசிகள், ஒரு வீடு, ஒரு கையடக்க தொலைபேசி மற்றும் ஒரு தொலைநகல் இயந்திரம் என்பவை மாத்திரமே அரசாங்கத்தின் செலவில் வழங்கப்படும். 

அதற்கமைய அலுவலக மற்றும் வீட்டு தொலைபேசிக்காக 20,000 ரூபா அதிகபட்ச கொடுப்பனவும், கையடக்க தொலைபேசிக்காக அதிபட்சம் 10,000 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படும்.

அதேபோன்று கொள்கை திட்டமிடலுக்கான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காக சுயாதீனமாக ஆலோசகர் ஒருவரை அல்லது குழுவொன்றை நியமித்துக் கொள்ள முடியும். 

அவர்கள் குறித்த விடயத்தில் நிபுணத்துவமும் அனுபவமும் உடையவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு எந்தவொரு பதவிக்கும் அமைச்சர்கள் அல்லது பிரதி அமைச்சர்கள் தமது உறவினர்களை நியமிக்க முடியாது.

குறித்த ஆலோசகர்களுக்கான கொடுப்பனவுகள் அவர்களது தகைமைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படும். அத்தோடு அவை பொது நிர்வாக சுற்று நிரூபத்துக்கு அமையவே தீர்மானிக்கப்படும். 

இவற்றுக்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தமது அலுவலகப் பணிகளுக்காக செயலாளர்கள் உட்பட 15 உத்தியோகத்தர்களையும், பிரதி அமைச்சர்களும் அதேபோன்று 12 உத்தியோகத்தர்களையும் நியமிக்க முடியும்.

இந்த வரையறைகள் கடந்த 6ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த சுற்றுநிரூபத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சந்தேகநபர்களை விடுவிப்பதற்கான சட்டமா அதிபரின் தீர்மானம்...

2025-02-09 09:35:48
news-image

சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின்...

2025-02-09 09:29:03
news-image

14 இந்திய மீனவர்கள் கைது

2025-02-09 09:35:46
news-image

தமிழரசுக்கு எதிரான திருமலை வழக்கு :...

2025-02-08 23:29:29
news-image

ஜனாதிபதி அநுர நாளை எமிரேட்ஸ் செல்கிறார்

2025-02-09 08:57:55
news-image

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்துவத்தை உறுதிப்படுத்துங்கள்...

2025-02-08 23:28:18
news-image

அரசியல் தீர்வை கைவிட்டால் நாடு பாதாளத்தில்...

2025-02-08 23:27:28
news-image

சட்டமா அதிபரை பதவி விலக செய்வதற்கு...

2025-02-08 23:26:12
news-image

கிரிஷ் கட்டிடத்தில் எவ்வாறு தீ பரவியது?...

2025-02-08 23:31:16
news-image

வெளிநாட்டு சேவை நியமனங்களில் அரசியல் மயமாக்கம்...

2025-02-08 23:30:12
news-image

இன்றைய வானிலை

2025-02-09 06:49:28
news-image

ரணில் - சஜித் கூட்டணி பேச்சுவார்த்தை...

2025-02-08 23:33:26