தீபம் ஏற்றுவதில் கவனம் தேவையா..?

Published By: Digital Desk 2

24 Jan, 2025 | 04:44 PM
image

இறை வழிபாட்டில் ஈடுபடும் அனைவருக்கும் எம்முடைய முன்னோர்கள் கற்பித்திருக்கும் எளிய வழிபாடு என்பது தீபம் ஏற்றுவது தான். கடந்த நூற்றாண்டுகளில் சூரியன் மறைவிற்குப் பிறகு வீடுகளில் தீபம் ஏற்றுவதை வழக்கமாகவும், கலாச்சாரமாகவும், நிலவியல் சார்ந்த வழிகாட்டியாகவும் வைத்திருந்தனர். அத்தகைய தீபம் ஏற்றுவதை இறை வழிபாட்டிற்குரிய முக்கிய காரணியாகவும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் முன்மொழிந்தார்கள்.

அந்த காலகட்டத்தில் ஆலயத்தில் இரவு நேர பூசைக்கு தீ பந்தமும், நெய் விளக்கும் , நல்லெண்ணெய் விளக்கும் தான் பிரதானமாக இருந்தது. அதே தருணத்தில் ஆலயத்தில் தீபம் ஏற்றுவதற்கும், எம்முடைய வீடுகளில் தீபம் ஏற்றுவதற்கும் வேறுபாடு இருந்தது என்பதையும் எம்முடைய முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த வகையில் எம்முடைய இல்லங்களில் பூஜை அறையில் எந்த தீபத்தை ஏற்றுவது என்பது குறித்தும், எந்த தீபத்தை ஏற்றி வணங்கக் கூடாது என்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். அதைப் பற்றி விவரமாக தொடர்ந்து காண்போம்.

வணிகமயமாகிவிட்ட தற்போதைய சூழலில் எந்த காரணத்தை முன்னிட்டும் வீட்டில் உள்ள விளக்கிற்கு பஞ்ச தீப எண்ணெயை பாவிக்க கூடாது. எம்முடைய வீடுகளில் உள்ள பூஜை அறையில் இடம்பெற்றிருக்கும் இறைவனின் உருவப்படத்திற்கு நல்லெண்ணெய் அல்லது பசு நெய்யால் மட்டும்தான் விளக்கேற்ற வேண்டும்.

வேறு சிலர் தங்களுடைய பிரச்சனைகளுக்கான பரிகாரத்திற்காக இறைவழிபாட்டின் போது சோதிட நிபுணர்கள் இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றுங்கள் என குறிப்பிட்டு இருப்பார்கள். இத்தகைய இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றி வழிபடுவதை ஒருபோதும் எம்முடைய இல்லங்களில் மேற்கொள்ளக்கூடாது. இலுப்பை எண்ணெய் என்பது சிவபெருமானுக்கு உகந்தது. அதனால் உங்களுடைய வீட்டிற்கு அருகில் இருக்கும் சிவாலயங்களுக்கு சென்று சிவனின் சன்னதிக்கு முன்பு இலுப்பை எண்ணெயால் தீபமேற்றி வழிபட்டால் தான் உங்களுடைய பிரார்த்தனை பலிக்கும்.

பெண்கள் மற்றும் பெண்மணிகள் தங்களுடைய திருமணத்திற்காகவோ அல்லது மறுமணத்திற்காகவோ ஜோதிட நிபுணர்கள் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்ச பழத்தில் விளக்கு ஏற்றுங்கள் என பரிந்துரை செய்திருப்பார்கள். எந்த விளக்கினையும் ஒருபோதும் இல்லத்தில் ஏற்றக்கூடாது. இதனையும் அருகில் இருக்கும் சிவாலயத்தில் தனிச் சன்னதியுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கும் துர்க்கை அம்மனின் சன்னதியில் தான் இத்தகைய விளக்கினை ஏற்றி வழிபட வேண்டும். அப்போதுதான் உங்களுடைய கோரிக்கையை பிரபஞ்சம் ஏற்று பலன் தரும்.

வேறு சிலருக்கு தடையும், தாமதமும் ஏற்பட்டிருப்பதால் அதனை நீக்குவதற்கான பரிகாரமாக தேங்காய் மூடியில் நெய் ஊற்றி விளக்கேற்றி வழிபட வேண்டும் என சோதிட நிபுணர்கள் பரிந்துரை செய்திருப்பார்கள். இத்தகைய தேங்காய் விளக்கினையும் வீட்டில் ஏற்றக்கூடாது. அதையும் கடந்து ஏற்றினால் உங்களுடைய எண்ணம் நிறைவேறாது. அதனால் இத்தகைய தீபத்தையும் நீங்கள் அருகில் இருக்கும் ஆலயத்தில் தான் ஏற்றி வழிபட வேண்டும்.

வேறு சிலர் அகல் விளக்கில் நல்லெண்ணெயுடன் எள் முடிச்சினையும் இட்டு தீபம் ஏற்றுவார்கள். இந்த தீபம் சனி பகவானுக்கு உரியது. இந்த தீபத்தையும் எந்த காரணத்தை முன்னிட்டும் எம்முடைய இல்லங்களில் மேற்கொள்ளக்கூடாது. அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று அங்கு சனி பகவானுக்கு தனி சன்னதி இருந்தாலோ அல்லது நவகிரகங்களில் சனி பகவான் வீற்றிருக்கும் திசை நோக்கியோ இத்தகைய விளக்கை ஏற்ற வேண்டும். அப்போதுதான் உங்களுடைய பாவங்கள் தோஷங்கள் விலகி நற்பலன் கிடைக்கும்.

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முருகனின் அருளை பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-02-06 17:20:36
news-image

நினைத்த காரியத்தை நடத்தி தரும் தேங்காய்...!!?

2025-02-05 23:15:14
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்கும் சூட்சம...

2025-02-03 16:17:32
news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை..?

2025-02-01 20:35:36
news-image

விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்...

2025-01-31 22:24:19
news-image

கடனுக்கு தீர்வு காண்பதற்கான சூட்சமம்..?

2025-01-31 17:12:14
news-image

தோஷத்தை நீக்குவதற்கான தீப வழிபாடு மேற்கொள்வது...

2025-01-30 14:26:15
news-image

சூரிய பகவானின் பரிபூரண ஆசி கிடைப்பதற்கான...

2025-01-29 20:43:33
news-image

செல்வத்தை அதிகரிப்பதற்கான பிரத்தியேக விருட்ச வழிபாடு

2025-01-27 13:09:12
news-image

அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் தமிழ் வழி எண்...

2025-01-25 16:24:32
news-image

தீபம் ஏற்றுவதில் கவனம் தேவையா..?

2025-01-24 16:44:40
news-image

வெற்றியை உண்டாக்கும் மந்திர வழிபாடு

2025-01-23 16:12:37