இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவு

Published By: Digital Desk 2

24 Jan, 2025 | 04:19 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பத்தாவது பாராளுமன்றத்தில் இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம்  சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாணயக்கார தெரிவு செய்யப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர்  பத்மநாதன் சத்தியலிங்கம் நட்புறவுச்சங்கத்தின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக் இந்நிகழ்வில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டார்.

மேலும்,குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன உள்ளிட்டோரும் இதன்போது கலந்துகொண்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன கூறுகையில், கடந்த 7 தசாப்தங்களாக இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய உறவுகள் வலுவடைந்துள்ளன இந்த நட்புறவுச் சங்க மீள் ஸ்தாபிப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பிணைப்புக்கு ஒரு சான்றாகும். குறிப்பாக வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இரண்டு பாராளுமன்றங்களுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும் இது ஒரு தளத்தை ஏற்படுத்துகிறது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது ஐக்கிய இராஜ்ஜியம் வழங்கிய ஆதரவு மற்றும் பரிஸ் கழக உறுப்பினராக கடன் மறுசீரமைப்புக்கு அளித்த பங்களிப்புகளுக்காக நன்றி கூறிகிறோம்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களை செயலமர்வுகள், மாநாடுகள் மற்றும் ஆய்வுப் பயணங்கள் மூலம் மேம்படுத்துவதில் விலைமதிப்பற்ற பங்களிப்புகளைச் செய்ததற்காக ஜனநாயகத்துக்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றத்துக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

இங்கு உரையாற்றிய இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக் கூறுகையில் சுமார் 50,000 இலங்கை மாணவர்கள் தற்போது ஐக்கிய இராஜ்ஜியத்தில் கல்வி பயின்று வருகிறார்கள். கல்வித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளைத் தொடர்ந்து வளர்ப்பதை ஐக்கிய இராஜ்ஜியம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அடுத்த 30 ஆண்டுகளில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக் கணிப்புகளின்படி, இந்தப் பிராந்தியம் அதிகளவான செல்வாக்கு மிக்கதாக மாறும். பிரகாசமான எதிர்காலத்திற்கு இலங்கை ஒரு நல்ல நிலையில் இருக்கிறது என்றார்.

இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்தமை தொடர்பில் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இதன்போது நன்றி தெரிவித்து கூறுகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகால உறவை மேம்படுத்துவதில் நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிப்பது ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.

இலங்கைக்கும் ஐக்கிய இராஜ்ஜியத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பின் புதிய வழிகளை ஆராய்வதற்கும் உணர்ந்து கொள்வதற்கும் இந்தச் சங்கத்தை ஒரு சக்திவாய்ந்த தளமாக மாற்ற நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும், பாராளுமன்ற ஒத்துழைப்பை வளர்ப்பதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை விரிவுபடுத்துவதிலும் மீள ஸ்தாபிக்கப்பட்ட பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சந்தேகநபர்களை விடுவிப்பதற்கான சட்டமா அதிபரின் தீர்மானம்...

2025-02-09 09:35:48
news-image

சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின்...

2025-02-09 09:29:03
news-image

14 இந்திய மீனவர்கள் கைது

2025-02-09 09:35:46
news-image

தமிழரசுக்கு எதிரான திருமலை வழக்கு :...

2025-02-08 23:29:29
news-image

ஜனாதிபதி அநுர நாளை எமிரேட்ஸ் செல்கிறார்

2025-02-09 08:57:55
news-image

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்துவத்தை உறுதிப்படுத்துங்கள்...

2025-02-08 23:28:18
news-image

அரசியல் தீர்வை கைவிட்டால் நாடு பாதாளத்தில்...

2025-02-08 23:27:28
news-image

சட்டமா அதிபரை பதவி விலக செய்வதற்கு...

2025-02-08 23:26:12
news-image

கிரிஷ் கட்டிடத்தில் எவ்வாறு தீ பரவியது?...

2025-02-08 23:31:16
news-image

வெளிநாட்டு சேவை நியமனங்களில் அரசியல் மயமாக்கம்...

2025-02-08 23:30:12
news-image

இன்றைய வானிலை

2025-02-09 06:49:28
news-image

ரணில் - சஜித் கூட்டணி பேச்சுவார்த்தை...

2025-02-08 23:33:26