(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்பட்ட தலைவர்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஐதுருஸ் மொஹம்மது இல்யாஸின் அர்ப்பணிப்பு மகத்தானதாகும். அதேபோன்று டி.எஸ். சேனாநாயக்கவின் பரம்பரையில் வந்த ருக்மன் சேனாநாயக்க ஒரு முன்மாதிரிமிக்க அரசியல் தலைவராவார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் ஐ. எம். இல்யாஸ், ருக்மன் சேனாநாயக்க, ரெஜினோல் பெரேரா மற்றும் சிறினால் டி மெல் ஆகியோர் மீதான அனுதாப பிரேரணை மீது உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ் 1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். யுத்த சூழ்நிலையில் யுத்தத்தினால் வெளியேற்றப்பட்ட மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு முதலான பிரதேச மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். இவ்வாறு வெளியேற்றப்பட்ட அகதி சமூகத்தின் பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றம் ஆணை அவருக்கு கிடைத்தது. அவர் தனது தொழிலால் மருத்துவராக இலவச மருத்துவ சேவைகளை வழங்கினார். கல்வித் துறையைக் கட்டியெழுப்ப பாடுபட்டார்.
வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்து, இடம்பெயர்ந்த மக்களுக்கு காணிகளை வழங்கி பெரும் சேவைகளை ஆற்றினார். அவ்வாறே, ரயில் சேவையை ஆரம்பிக்கவும், விவசாயத்துறையில் அபிவிருத்தியை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்தார். மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை அமைதியான போராட்டங்களாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். ஜனாதிபதி தேர்தல்களிலும் அவர் போட்டியிட்டுள்ளார்.
அதேபோன்று காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ருக்மன் சேனாநாயக்க எமது நாட்டிலுள்ள பிரபல அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். சுதந்திரத்திற்காக பெரும் பணியாற்றிய மகாமான்ய டி.எஸ்.சேனாநாயக்கவின் தலைமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர். பட்டினியால் வாடும் மக்களை பட்டினியில் இருந்து காப்பாற்றிய சோறு அளித்த தந்தை என அழைக்கப்படும் டட்லி சேனநாயக்கவின் குடும்ப உறுப்பினராக அரசியலில் பிரவேசித்தார். அவர் பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவை அமைச்சராகவும் இருந்து இந்த நாட்டுக்கு மக்களுக்கு பெரும் சேவைகளை ஆற்றியுள்ளார்.
88/89 களில் நாட்டில் இளைஞர்கள் போராட்டம் நடந்தபோது இளைஞர்களுடன் அரசாங்கத்துடனும் கலந்துரையாடி புரிந்துணர்வை ஏற்படுத்தியவர். சாதாரண மக்களுக்காக தனது சொந்த வளங்களையும், சொத்துக்களையும் அர்ப்பணித்தவர். வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் ஒரு முன்மாதிரியான அரசியல் தலைவர் என்று அவரை வர்ணிக்க முடியும்.
எனவே காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் ஐ. எம். இல்யாஸ், ருக்மன் சேனாநாயக்க, ரெஜினோல் பெரேரா மற்றும் சிறினால் டி மெல் ஆகியோரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM