(நெவில் அன்தனி)
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் பெயரிடப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு இலங்கையின் சரித் அசலன்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இந்த சிறப்பு அணியில் சரித் அசலன்கவுடன் பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க ஆகிய இலங்கை வீரர்களும் இடம்பெறுகின்றனர்.
சரித் அசலன்க கடந்த வருடம் 16 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 4 அரைச் சதங்களுடன் 605 ஓட்டங்களை மொத்தமாக பெற்றார். அவரது சராசரி 50.2ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 97.1ஆகவும் அமைந்துள்ளது. ஸிம்பாப்வேக்கு எதிராக பெற்ற சதத்துடன் (101 ஓட்டங்கள்) கடந்த வருடம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டை ஆரம்பித்தார்.
பந்துவீச்சில் 10 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தார்.
பெத்தும் நிஸ்ஸன்க கடந்த வரும் 12 போட்டிகளில் ஓர் இரட்டைச் சதம் உட்பட 3 சதங்கள், ஒரு அரைச் சதத்துடன் 694 ஓட்டங்களைக் குவித்திருந்தார். அவரது சராசரி 63.09ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 106.44ஆகவும் இருந்தது.
குசல் மெண்டிஸ் 17 போட்டிகளில் ஒரு சதம், 6 அரைச் சதங்களுடன் 742 ஓட்டங்களை மொத்தமாக பெற்றார். அவரது சராசரி 53.00ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 90.59ஆகவும் இருந்தது.
சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க 10 போட்டிகளில் 26 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார்.
ஸிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 19 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தி அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்திருந்தார்.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் அணியில் 3ஆம் இலக்க வீரராக பெத்தும் நிஸ்ஸன்கவும் 4ஆம் இலக்க வீரராக குசல் மெண்டிஸும் 5ஆம் இலக்க வீரராக சரித் அசலன்கவும் 8ஆம் இலக்க வீரராக வனிந்து ஹசரங்கவும் இடம்பெறுகின்றனர்.
இந்த அணியில் இந்தியர்கள், அவுஸ்திரேலியர்கள் எவருமே இடம்பெறவில்லை.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தலா மூவர் இந்த அணியில் இடம்பெறுவதுடன் ஒரே ஒரு மேற்கிந்தியத் தீவுகள் வீரர் இடம்பெறுகிறார்.
சுருக்கமாக சொன்னால் இந்த அணி கிட்டத்தட்ட தெற்காசிய அணியாக காணப்படுகிறது.
2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணி விபரம் (துடுப்பாட்ட வரிசையில்)
சய்ம் அயூப் (பாகிஸ்தான்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்), பெத்தும் நிஸ்ஸன்க (இலங்கை), குசல் மெண்டிஸ் (இலங்கை), சரித் அசலன்க (தலைவர் - இலங்கை), ஷேர்பேன் ரதபர்ட் (மே.தீவுகள்), அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் (ஆப்கானிஸ்தான்), வனிந்து ஹசரங்க (இலங்கை), ஷஹீன் ஷா அப்ரிடி (பாகிஸ்தான்), ஹரிஸ் ரவூப் (பாகிஸ்தான்), ஏ.எம். கஸன்பார் (ஆப்கானிஸ்தான்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM