(நெவில் அன்தனி)
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் பெயரிடப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சிறப்பு அணியில் சமரி அத்தபத்து இடம்பெற்றுள்ளார்.
ஐசிசி விருதுகள் சிலவற்றுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள சமரி அத்தபத்து கடந்த வருடம் 9 மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மாத்திரம் விளையாடி ஒரு சதம், 2 அரைச் சதங்கள் உட்பட 458 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார்.
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக பொச்சேஸ்ட்ரூம் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் அவர் குவித்த ஆட்டம் இழக்காத 195 ஓட்டங்களின் உதவியுடன் இலங்கை 6 விக்கட்களால் அமோக வெற்றிபெற்றிருந்தது.
பந்துவீச்சில் 9 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார்.
மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான தரவரிசையில் சமரி அத்தபத்து தற்போது முதலிடம் வகிக்கிறார்.
2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவியாக தென் ஆபிரிக்காவின் லோரா வுல்வார்ட் பெயரிடப்பட்டுள்ளார்.
அணி விபரம் (துடுப்பாட்ட வரிசையில்)
ஸ்ம்ரித்தி மந்தனா (இந்தியா), லோரா வுல்வார்ட் (தலைவி - தென் ஆபிரிக்கா), சமரி அத்தபத்து (இலங்கை), ஹேலி மெத்யூஸ் (மேற்கிந்தியத் தீவுகள்), மாரிஸ்ஆன் கெப் (தென் ஆபிரிக்கா), ஏஷ்லி கார்ட்னர் (அவுஸ்திரேலியா), அனாபெல் சதர்லண்ட் (அவுஸ்திரேலியா), அமி ஜோன்ஸ் (விக்கெட் காப்பாளர் - இங்கிலாந்து), தீப்தி ஷர்மா (இந்தியா), சொபி எக்லஸ்டோன் (இங்கிலாந்து), கேட் க்ரொஸ் (இங்கிலாந்து)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM