இலங்கையின் தென்பகுதியில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையையடுத்து, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில்  உலக நாடுகள் பல அனர்த்த நிவாரணங்களை அனுப்பி வைத்தவண்ணமுள்ளன.

அந்தவகையில்  இந்தியாவின் மருத்துவக் குழு மற்றும் நிவாரணப் பொருட்கள் அடங்கிய முதலாவது கப்பல் கடந்த சனிக்கிழமை காலை கொழும்பை வந்தடைந்தது.

இந்நிலையில் இந்தியாவின் 3 ஆவது கப்பலும் நிவாரணப்பொருட்களுடன் இலங்கை வந்துள்ளது. இதேவேளை, பாகிஸ்தானின் நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பலொன்று இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

சீனாவின் நிவாரணப்பொருட்களுடன் 3 கப்பல்கள் எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தையடுத்து, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் சிங்கப்பூர் அரசாங்கம் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை அனர்த்த நிவாரண உதவியாக வழங்கவுள்ளது.

இஸ்ரேல் அரசாங்கமும் இலங்கையில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இயற்கை அனர்த்­தத்தால் பாதிக்­கப்­பட்­டுள்ள இலங்­கைக்கு உதவி வழங்க பல்­வேறு நாடு­களும் முன்­வந்­து­ள்ள நிலையில், அமெ­ரிக்கா, ஜப்பான் மற்றும் பிரித்­தா­னியா ஆகிய நாடு­களின் தூது­வர்­களும் உயர்ஸ்­தா­னி­கர்­களும் நேற்று வெளிவி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை அவ­ரது அமைச்சில் சந்­தித்­துள்­ளனர்.

குடிநீர் சுத்­தி­க­ரிப்பு மின்­பி­றப்­பாக்கி ஆகி­ய­வற்றை பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொள்­வ­தா­கவும் அத்­தோடு நிவா­ரண நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தற்­காக ஜப்­பானின் விசே­ட­கு­ழு­வொன்றை இலங்­கைக்கு அனுப்பி வைப்­ப­தா­கவும் ஜப்பான் தூதுவர் தெரி­வித்துள்ளார்.

இலங்கை அர­சாங்­கத்­திற்கு எத்­த­கைய சந்­தர்ப்­பத்­திலும் நிவா­ரணம் வழங்­கு­வ­தற்கு அமெ­ரிக்கா தயா­ராக இருப்­ப­தாக அமெ­ரிக்க தூதுவர் அதுல்­கேசாப்  தெரிவித்துள்ளார்.

இலங்­கைக்­கான பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னிகர் ஜேம்ஸ் டொரிஸ், இயற்கை அனர்த்தம் தொடர்­பான நிவா­ரண நட­வ­டிக்­கையில் பிரித்­தா­னியா இலங்­கைக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தா­க ­தெ­ரி­வித்­துள்ளார். 

இதேவேளை, அவுஸ்திரேலிய அரசாங்கம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக  5 இலட்சம் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்கவுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் அம்ஜற் உசைன் பீ சாகில் அமைச்சர் ரவிகருணாநாயக்கவை சந்தித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பல பலர் காணாமல்போயுள்ளனர்.  இதேவேளை, சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்காலிக முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் உலகநாடுகளிடம் இருந்து கிடைக்கப்பெறுகின்ற நிவாரண உதவிகள் உரிய நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையச் செய்வது உரிய அதிகாரிகளின் கடமையும் பொறுப்பும் ஆகும்.