வரலாறு காணாத அளவுக்கு பச்சை மிளகாயின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ பச்சை மிளகாய் 1800 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பால் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் பல நுகர்வோர் திணறி வருகின்றனர்.
பச்சை மிளகாயின் மொத்த விற்பனை விலை 1,780 ரூபாவாகவும், உள்ளூர் சந்தைகளில் 1,800 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கை உணவு வகைகளில் ஒரு முக்கிய மூலப்பொருளான பச்சை மிளகாயை பல குடும்பங்களுக்கு கட்டுப்படியாகாத ஆடம்பர பொருளாக மாறியுள்ளது.
சீரற்ற வானிலை, குறைந்த அறுவடை மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவைகளே விலை அதிகரிப்பு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தேங்காய் மொத்த விற்பனை விலை 130 ரூபாய் முதல் 150 ரூபாயும், உள்ளூர் சந்தையில் 140 ரூபாய் முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தேங்காய் விலை குறைந்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM