பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் - தலிபானின் தலைவர்களை கைதுசெய்வதற்கு சர்வதேச நீதிமன்ற அதிகாரிகள் முயற்சி

Published By: Rajeeban

24 Jan, 2025 | 12:35 PM
image

பெண்கள் யுவதிகளை துன்புறுத்தியமைக்காகவும் அவர்களிற்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காகவும்  ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பின் தலைவர்களை கைதுசெய்வதற்கான முயற்சிகளில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஈடுபட்டுள்ளது.

பெண்கள் யுவதிகள் துன்புறுத்தப்படுகின்றமை தொடர்பில் தலிபான் அரசாங்கத்தின் சிரேஸ்ட தலைவர்களை கைதுசெய்வதற்கான பிடியாணையை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடவுள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

தலிபானின் உயர்தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சாதாவும், பிரதம நீதிபதியும் பாலின அடிப்படையில் மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட குற்றங்களிற்கு பொறுப்பானவர்கள் என சந்தேகிப்பதற்கான வலுவான காரணங்கள் உள்ளன என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்குரைஞர் கரீம்ஹான் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் யுவதிகளை குற்றவியல் அடிப்படையில் துன்புறுத்துவதற்கும் அத்துடன் தலிபானின் பாலின கருத்தியலுடன் ஒத்துப்போகவில்லை என கருதப்படும் நபர்கள் துன்புறுத்தப்படுவதற்கும் பெண்கள் யுவதிகளின் நண்பர்கள் என கருதப்படுபவர்கள் துன்புறுத்தப்படுவதற்கும் இந்த இருவருமே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

தலிபானிற்கு எதிரான எதிர்ப்பை,கொலை, சிறைத்தண்டனை,சித்திரவதை பாலியல் வன்முறை உட்பட ஏனைய பாலியல் கொடுமைகள்  மூலம் அடக்குகின்றனர் என அவர்தெரிவித்துள்ளார்.

பிடியாணையை பிறப்பிப்பதா என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் தற்போது தீர்மானிப்பார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐரோப்பாவிற்கான இராணுவம் அவசியம் - உக்ரைன்...

2025-02-16 13:43:37
news-image

ஐரோப்பாவை தவிர்த்துவிட்டு உக்ரைன் குறித்து அமெரிக்க...

2025-02-16 13:41:32
news-image

ஆஸ்திரியாவில் கத்திக்குத்து தாக்குதல் - 14...

2025-02-16 13:35:43
news-image

உக்ரைன் குறித்து ரஸ்யாவுடன் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளில்...

2025-02-16 13:17:18
news-image

மோடி குறித்து கார்ட்டூன்; விகடன் இணையதளம்...

2025-02-16 12:06:42
news-image

80 வருடங்களிற்கு முன்னர் தாய்லாந்திலிருந்து மியன்மாருக்கு...

2025-02-16 11:18:34
news-image

டெல்லி புகையிரத நிலையத்தில் கூட்ட நெரிசலில்...

2025-02-16 07:20:57
news-image

பாப்பரசரின் உடல்நிலை குறித்து வத்திக்கானின் அறிவிப்பு

2025-02-15 13:04:33
news-image

படகுடன் மகனை விழுங்கிய திமிங்கிலம் -...

2025-02-14 17:35:40
news-image

உடல்நலப்பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி

2025-02-14 16:24:16
news-image

புட்டினுடன் டிரம்ப் தொலைபேசி உரையாடல் -...

2025-02-14 15:11:08
news-image

செர்னோபில் அணுஉலையை ரஸ்ய ஆளில்லா விமானம்...

2025-02-14 14:31:15