அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பேத்தி ஹை டிரம்ப் தனது டிரம்பின் பதவியேற்பு நிகழ்வு குறித்த விடயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். நடனமாடியது குறித்தும் ஓவல் அலுவலகத்திற்கு முன்னால் படமெடுத்துக்கொண்டது குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் தனது யூடியுப் சனலில் இதனை தெரிவித்துள்ளார்.
அவரை யூடியுப்பில் 8இலட்சம் பேர் பின்தொடர்வது குறிப்பிடத்தக்கது.
ஹை டிரம்ப் உலகின் ஊடகங்களின் பார்வைக்கு தன்னை மேக்கப் கலைஞர்கள் தயார்படுத்துவதையும் சிகையலங்கார நிபுணர்களின் ஒப்பனைகளையும் காண்பிக்கும் ஹோட்டல் அறையில் எடுக்கப்பட்ட வீடியோக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஒருநடைபாதையில் தான் நடப்பதை வீடியோவில் படம்பிடிக்கும் அவர் இன்று எனது தாத்தா மீண்டும் அமெரிக்காவின்ஜனாதிபதியாகின்றார் என தெரிவிக்கின்றார்.
இந்த வாரத்தை வாழ்நாள் அனுபவம் என குறிப்பிடும் அவர் 47 டொனால்ட் டிரம்பினை பதவியேற்பு நிகழ்வில் பார்த்தது எப்படியிருந்தது என்ற கேள்விக்கு எனக்கு அவர் வழமையான தாத்தா போலதான் தென்பட்டார் என குறிப்பிடுகின்றார்.
அமெரிக்காவின் ஜனாதிபதியின் பேத்தி என்பதால் அவர் கலந்துகொள்ளவேண்டிய நிகழ்வுகளின் எண்ணிக்கை காரணமாக தான்களைப்படைந்ததாக சோர்வடைந்ததாக ஹே டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நான் மிகவும் களைப்படைந்தேன் நான் நீர்அருந்தவில்லை,சக்தியளிக்கும் பானங்களையும் கோப்பியையும் அருந்தினேன், நான் களைப்படைந்து விட்டேன் இரவு மூன்று மணிநேரமே உறங்கினேன் என அவர் தெரிவித்துள்ளார்.
பதவியேற்பு நிகழ்விற்கு முன்னர் வீடியோவில் நாங்கள் இதனை செய்வோம் என தெரிவிக்கும் ஹே டிரம்ப் கப்பிட்டல் தேநீர்விடுதியில் குக்கிகளை உண்கின்றார்.
அதன் பின்னர் தனது நண்பர்களுடன் வெள்ளைமாளிகையின் ஓவல் அலுவலகத்தின் முன்னாள் படம்பிடித்துக்கொள்வதையும் அவர் வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் டொனால்ட்டிரம்ப் ஜூனியரும் சில நிமிடங்கள் தோன்றுகின்றார்,அவர் தனது மகளுடன் நடனமாடுகின்றார்.
நடனமாடியது குறித்த தனது மனஉணர்வை யூடியுப்பில் பகிர்ந்துகொண்டுள்ள ஹே டிரம்ப் நான் முன்னர் ஒருபோதும் நடனமாடியதில்லை எனக்கு நடனமாட வராது என தெரிவிக்கின்றார்.
வெள்ளை மாளிகைக்கு 20 தடவைகள் சென்றுள்ளதாக தெரிவிக்கும் அவர் டிரம்பின் இளைய மகன் பரனுடன் தான் வெள்ளை மாளிகையின் புல்வெளிகளில் ஒளித்து மறைந்து விளையாடுவதாகவும் கோல்ப் விளையாடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
டிக்டொக் மீதான தடையை நடைமுறைப்படுத்தாதற்கு டிரம்பின் பேத்தி அவருக்கு நன்றி தெரிவிக்கின்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM