புறக்கணிக்கப்படாத எதிர்காலத்தை நோக்கி.... | இன்று உலக தொழுநோய் தினம்!

26 Jan, 2025 | 12:14 PM
image

உலக தொழுநோய் தினம் என்றால் என்ன?

உலக தொழுநோய் தினம் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிறன்று அனுசரிக்கப்பட்டு, அதை தொடரும் வாரங்களில் நினைவுகூரப் படுகிறது. இது தொழுநோய் மற்றும் அது சார்நத களங்கத்துக்கு எதிரான தற்போதைய போராட்டத்தின் உலகளாவிய நினைவூட்டலாக செயல்படுகிறது. இந்த முக்கியமான நாள் தொழுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை முன்னிலைப்படுத்துவதையும், பாகுபாட்டைக் குறைப்பதற்கான முயற்சிகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 

உலக தொழுநோய் தினமானது புரிந்துணர்வை வளர்ப்பதன் மூலம் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் சமூகப் புறக்கணிப்பை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு முக்கிய பங்காக இருப்பதோடு எவரும் அவர்களின் நோயால் புறக்கணிக்கப்படாத எதிர்காலத்தை நோக்கி உழைக்கிறது.

தொழுநோய் என்றால் என்ன?

தொழுநோய் என்பது ஒரு நாட்பட்ட தொற்று நோயாகும். இது முதன்மையாக தோல், நரம்புகள் மற்றும் சில வேளைகளில் சீதமென்சவ்வுகளையும் பாதிக்கின்றது. 

இலங்கையில், இந்த நோய் தொடர்ந்தும் குறிப்பிடத்தக்க அளவில் பரவி வருகிறது, ஆயிரக்கணக்கான நபர்கள் அதன் பாதிப்புடன் வாழ்கின்றனர். நவீன காலத்தில் பன்மருந்து முறை (MDT) மூலம் தொழுநோய் முழுமையாக குணப்படுத்தக்கூடியதாகவும் சிகிச்சை அளிக்கக்கூடியதாகவும் இருந்தாலும், பாதிக்கப்பட்ட தனிநபர்கள் இன்னும் கடுமையான சமூக இழிவு மற்றும் பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர். இந்த பிழையான எண்ணக் கருத்துக்கள் பெரும்பாலும் அவர்களின் வேலை செய்யும் திறன், குடும்பம் மற்றும் சமூக உறவுகள் மற்றும் சமூகத்தில் நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கான ஒட்டுமொத்த திறனையும் பாதிக்கின்றது.

ஆழமாக வேரூன்றிய சமூக பிழையான எண்ணக் கருத்துக்கல், நோயின் உடல் ரீதியான சவால்களை கூட்டுவது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட நபர்களை சமூகத்தின் நிழலில் வைத்து ஏற்றுக்கொள்வதற்கும், அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் போராடுகிறது. இதன் விளைவாக தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் மன உளைச்சளுக்கு உள்ளாகின்றார்கள். தனிநபர்கள் தொழுநோயைச் சுற்றியுள்ள களங்கம், சமூகப் புறக்கணிப்பு மற்றும் பாகுபாடுகளுக்கு அஞ்சுவதால், ஆரம்பகால பரிசோதனை மற்றும் சிகிச்சையைத் தேடுவதைத் தடுக்கிறது.

நோயுடன் தொடர்புடைய அவமானத்தினால் சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்படுவோம் என்று நினைத்து, சிகிச்சை நிலையங்களுக்குச் செல்லவோ அல்லது மருத்துவர்களை அணுகவோ தயங்குகிறார்கள். இதன் விளைவாக, தாமதமான நோயறிதல் மற்றும் சிகிச்சையானது மென்மேலும் நோய் பரவுவதற்கு வழிவகுப்பதோடு, நிரந்தர அங்கவீன அபாயத்தையும் அதிகரிக்கின்றது. தொழுநோயுடன் வாழ்பவர்களை ஏற்றுக்கொள்வதற்கும் ஆதரவளிப்பதற்கும் உள்ள தடைகளைக் கடப்பதில் அதிக விழிப்புணர்வு மற்றும் புரிந்துணர்வு அவசரத் தேவையை இந்த தற்போதைய சமூக விலக்கு எடுத்துக்காட்டுகிறது.

ஐக்கிய அபிவிருத்தி நிதியம் (ADT)

ஐக்கிய அபிவிருத்தி நிதியம் (ADT) என்பது இலங்கை முழுவதும் உள்ள விளிம்புநிலை சமூகங்களை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.

2005இல் நிறுவப்பட்ட ஐக்கிய அபிவிருத்தி நிதியம் (ADT), வறுமை, நோய், இயற்கை பேரழிவுகள் மற்றும் சமூக அநீதிகளால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய அயராது உழைக்கிறது.

ஐக்கிய அபிவிருத்தி நிதியத்தின் (ADT) நோக்கம், சமூக அமைதி, பொது நீதி மற்றும் பொருளாதாரத் திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, ஆற்றல்மிக்க செயல்களின் மூலம் சமூகங்களை ஒன்றிணைத்து அதிகாரம் அளிப்பதாகும். அவர்கள் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை அணுகி அவர்களின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்த உதவுகிறார்கள்.

தொழுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக வாதிடுவதிலும் ஐக்கிய அபிவிருத்தி நிதியம் (ADT) முக்கிய பங்காற்றியுள்ளது.

எங்கள் குழுவின் நோக்கமானது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வீட்டுக்கு வீடு ஆய்வுகள் மற்றும் திரையிடல்கள் வெளிப்புற பங்குதாரர்களுக்கான பயிற்சி தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான சுய-கவனிப்புக் குழுக்கள் மற்றும் கூட்டங்களைத் திட்டமிடுதல் போன்ற பல்வேறு செயற்பாடுகள் மூலம் தொழுநோய் குறித்ததான களங்கத்தை குறைத்து சமூக விழிப்புணர்வை மேம்படுத்துவதாகும். 

சமூகப் பாகுபாட்டைக் குறைப்பதற்கான வளங்களைச் சேர்ப்பதன் மூலமும், தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், ஆரோக்கியமான, நிறைவான வாழ்க்கையை நடத்துவதற்கும் அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் ஐக்கிய அபிவிருத்தி நிதியம் (ADT) உதவுகிறது.

தொழுநோயாளிகளுக்கான சட்டம்

இலங்கையில் தொழுநோயாளிகளுக்கான சட்டம் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களை சட்ட ரீதியாகப் பிரித்து வாழ்வின் பல்வேறு அம்சங்களில் அவர்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அவர்களை பாகுபாடு காட்டுவதற்கு தொடர்ந்து பங்களிக்கிறது.

தொழுநோய் குணப்படுத்தக்கூடியதாக இருந்தாலும், இந்த தொன்மையான சட்டம் தீங்கிழைக்கும் ஒரே மாதிரியான மற்றும் சமூக ஒதுக்கீட்டை நிலைநிறுத்துகிறது. 

பெரும்பாலும் தனிநபர்களிடையே பாகுபாடு மற்றும் சுய -இழிவுகளுக்கு பங்களிக்கிறது. 2025ஆம் ஆண்டு உலக தொழுநோய் தினத்தின் முக்கிய செய்தியாக, தொழுநோயாளிகள் கட்டளைச் சட்டத்தை இரத்து செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை ஐக்கிய அபிவிருத்தி நிதியம் (ADT) அன்புடன் கேட்டுக்கொள்கிறது. அவ்வாறு செய்வதன் மூலம் ஐக்கிய அபிவிருத்தி நிதியமானது (ADT) பாகுபாட்டுக்கான சட்ட அடிப்படையை அகற்றி, தொழுநோயால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் கண்ணியத்துடனும் சமத்துவத்துடனும் வாழக்கூடிய ஒரு உள்ளடக்கிய சமுதாயத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

“2025 உலக தொழுநோய் தினத்துக்கான கருப்பொருளைப் பின்பற்றி ஒன்றுபடுவோம் செயல்படுவோம் இல்லாதொழிப்போம்” (Unite.Act.Eliminate) தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் ஒற்றுமையாக நிற்குமாறு பொது மக்களை ஐக்கிய அபிவிருத்தி நிதியம் (ADT) அழைக்கிறது, பழமை வாய்ந்த தவறான எண்ணங்களுக்கு அப்பால் செல்லவும், நடந்து வரும் களங்கம் மற்றும் பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான புரிதல், பட்சபாதம் மற்றும் ஆதரவை வழங்குமாறு அனைவரையும் வலியுறுத்துகிறது. ஏற்றுக்கொள்ளும் கலாசாரத்தை வளர்ப்பதன் மூலம் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படுவதை உறுதிசெய்யவும், சமூகத்தின் முழு உறுப்பினர்களாக அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ வாய்ப்பளிக்கவும் உதவலாம். ஒன்றாக, யாரும் தவறான கருத்துக்கள் பின்வாங்கப்படாத ஒரு உலகத்தை உருவாக்குவதற்கு மாறாக, அவர்களின் மனிதநேயத்துக்காக கொண்டாடுவோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right