கெப் வாகனத்தில் சட்டவிரோத மதுபானத்தை கடத்திச் சென்ற இருவர் கைது !

Published By: Digital Desk 2

24 Jan, 2025 | 11:22 AM
image

களுத்துறை, பண்டாரகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மில்லகஸ்ஹந்திய பிரதேசத்தில் கெப் வாகனத்தில் சட்டவிரோத மதுபானத்தை கடத்திச் சென்ற பெண் உட்பட இருவர் நேற்று வியாழக்கிழமை (23)  கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கெப் வாகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பண்டாரகம கிதெல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய ஆணும் 43 வயதுடைய பெண்ணும் ஆவர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 337.5 லீற்றர் சட்டவிரோத மதுபானம், சட்டவிரோத மதுபான விற்பனை செய்து சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 121,298 ரூபா பணம் மற்றும் கெப் வாகனம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29
news-image

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 3...

2025-03-19 09:22:23
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை...

2025-03-19 09:05:38
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-18 17:05:12
news-image

இன்றைய வானிலை

2025-03-19 06:23:07
news-image

'கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” எனும் பெயரை...

2025-03-19 05:00:29
news-image

சந்தாங்கன்னி மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாக...

2025-03-19 04:04:47
news-image

லால் காந்தவிடமிருந்து விசாரணைகளை ஆரம்பியுங்கள் ;...

2025-03-18 14:41:18
news-image

கிரிக்கெட் சபையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு...

2025-03-18 16:48:03
news-image

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணமும்...

2025-03-18 21:40:09
news-image

கிரிக்கெட் சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி...

2025-03-18 16:49:04
news-image

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும்...

2025-03-18 22:33:07