இந்திய நிதி உதவியில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்துக்கு "யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்" என தற்போது பெயர்ப்பலகை பொருத்தப்பட்டுள்ளது.
இந்திய மத்திய அரசின் நன்கொடையாக நிர்மாணிக்கப்பட்ட "யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்" 2023ஆம் ஆண்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நிதி ஒத்துழைப்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் திறந்துவைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 18ஆம் திகதி இலங்கையின் பிரதி கலாசார அமைச்சரும் இலங்கைக்கான இந்திய தூதுவர் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்ட நிகழ்வில் அக்கட்டடத்துக்கு "திருவள்ளுவர் கலாசார மையம்" என பெயர் சூட்டி பெயர்ப்பலகையை திறந்துவைத்தனர்.
"யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்" என்ற பெயர் மாற்றப்பட்டு, "திருவள்ளுவர் கலாசார மையம்" என பெயர் சூட்டியமைக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல்வாதிகள், கல்வியியலாளர்கள் உட்பட பல தரப்பினரும் தமது கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இன்றைய தினம் இக்கட்டடத்தில் "யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்" என மீண்டும் பெயர் மாற்றப்பட்டு, பெயர்ப்பலகை பொருத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM