கல்கிஸ்ஸ - சிறிபால மாவத்தை பகுதியில், கடந்த 19ஆம் திகதி நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவிய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பத்தேகம ஹல்பதொட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர், தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.
விசாரணையில் தெரியவருவது,
கைது செய்யப்பட்டவர், துப்பாக்கிச் சூடு நடாத்தியவர்களுக்கு, துப்பாக்கியையும், மோட்டார்சைக்கிளையும், தங்கும் வசதியும் செய்து கொடுத்தது தெரியவந்துள்ளது.
மேலும், வெளிநாட்டில் வசிக்கும் பயங்கரவாத கும்பலைச் சேர்ந்த படோவிட்ட அசங்க என்ற அசங்க பொன்சேகா மற்றும் சென்டா எனப்படும் கவிது தனஞ்சய ஆகியோரின் வழிநடத்துதலில் இந்த துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அதே நாளில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் பின்னால் அமர்ந்திருந்தவர் தப்பிச் சென்றுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM