(எம். ஆர். எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450 ரூபாவில் இருந்து 2000 ரூபாவாக உயர்த்துவதற்கு பாராளுமன்ற பராமரிப்புக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை திருத்தத்தின்படி, எம்.பியொருவரின் தினசரி காலை உணவிற்கு 600 ரூபாவும், மதிய உணவிற்கு 1300 ரூபாவும், மாலை தேநீருக்கு 100 ரூபாவும் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பராமரிப்புக் குழுவின் உறுப்பினரான பிரதி அமைச்சர் கமகேதர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு செயற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் எம்.பியொருவரிட் காலை உணவிற்கு 100 ரூபாவும், மதிய உணவுக்காக 300 ரூபாவும் மற்றும் மாலை தேநீருக்காக 50 ரூபாவும் அறவிடப்பட்டது.
இந்நிலையில், எம்.பிக்களின் உணவு செலவு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கைக்கு அமைய அதன் விலைகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதன்படி பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனினும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவகத்தில் விருந்தினரை உபசரித்தால் ஒரு எம்.பி.யிடம் இருந்து அறவிடப்படும் மேலதிக கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பிலோ மற்றும் பாராளுமன்ற ஊழியர்களின் உணவு விலையை அதிகரிப்பது தொடர்பிலோ எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM