புதிய விண்ணப்பதாரர்களுக்காக  ஒரு இலட்சத்து 25 ஆயிரம் கடவுச்சீட்டுக்கள் கொள்வனவு -  ஆனந்த விஜேபால 

Published By: Vishnu

23 Jan, 2025 | 11:56 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

புதிதாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்காக ஒரு இலட்சத்து 25 ஆயிரம் கடவுச்சீட்டுக்கள்  கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அதனைப் பெற்றுக் கொள்வதற்காக இணையவழி மூலமாக திகதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) நிலையியற் கட்டளை 27 இன் கீழ் 2 ல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

புதிதாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்காக ஒரு இலட்சத்து 25 ஆயிரம் கடவுச்சீட்டுக்கள்  கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அதனைப் பெற்றுக் கொள்வதற்காக இணையவழி மூலமாக திகதியைப் பெற்றுக் கொள்ள முடியும். அந்த வகையில் மேற்படி கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்கு ஐந்து மாத காலம் எடுக்கும்.

எனினும் எவருக்காவது கடவுச்சீட்டுக்கான அவசர தேவை காணப்படுமாயின் அதற்காக விசேட கரும பீடமொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை ஒரு நாளில் பெற்றுக் கொள்ள முடியும்.

இணையவழி மூலமாக தினத்தை ஒதுக்கிக் கொண்டுள்ளவர்களுக்காக ஒரு நாளில் 800 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுவதுடன் அவசர தேவைகளுக்காக கடவுச்சீட்டை எதிர்பார்ப்பவர்களுக்காக ஒரு நாளில் 650 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை, வெளிநாட்டுத் தூதுக்குழுவினருக்காக  தினமும் 500 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுகின்றன. 

2900 கடவுச்சீட்டுக்கள் தினமும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. எனினும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் பாதிப்பு காரணமாக புதிய கடவுச்சீட்டுக்களை  விநியோகிக்கும் செயற்பாடுகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. எவ்வாறாயினும் அரசாங்கம் அதனை விரைவாக முடிவுக்கு கொண்டு வந்து புதிய கடவுச் சீட்டுகளை விரைவாக விநியோகிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.

அத்துடன்  நிபுணர்கள் குழுவின் பரிந்துரையுடன் 5 லட்சம் கடவுச்சீட்டுக்களை டெண்டர் முறையில் கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் கடவுச்சீட்டுக்களை வழமை போன்று பெற்றுக் கொள்வதற்கான நிலையை உருவாக்க முடியும்.

கடந்த 2024 ஜனவரி மாதம் முதல் இதுவரை கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்வதற்காக 586935 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் இக்காலத்தில் 587094 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு யாத்திரைகளை மேற்கொள்பவர்களுக்காக தினமும் 250 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டு வருவதுடன் ஏற்கனவே இணையவழி மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு 250 கடவுச்சீட்டுகளும் கிளை நிறுவனங்கள் மூலம் 250 கடவுச்சீட்டுக்களும் வழமையான முறைமையின் கீழ் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இறுதிச் சடங்கு நிகழ்வில் தகராறு ;...

2025-02-12 10:05:14
news-image

139 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் 

2025-02-12 09:53:34
news-image

கஜேந்திரகுமாருக்கு நீதிமன்று அழைப்பாணை

2025-02-12 09:57:38
news-image

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக...

2025-02-12 09:17:43
news-image

டான் ப்ரியசாத்துக்கு விளக்கமறியல்

2025-02-12 09:52:23
news-image

இன்றைய வானிலை

2025-02-12 06:42:10
news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24