மட்டு. திருப்பெருந்துறையில் மைதானம் ஒன்றை தனது காணி என உரிமை கோரிய ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகரை தடுத்து நிறுத்திய மக்கள்

Published By: Vishnu

23 Jan, 2025 | 07:57 PM
image

மட்டக்களப்பு திருப்பெருந்துறை மறுமலர்ச்சி விளையாட்டுக்கழக பொது மைதானத்தை தனது காணி என உறுதி உட்பட ஆவணங்களுடன் சென்று வேலி நாட்ட வந்த கொழும்பைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை பொதுமக்கள் அங்கிருந்து விரட்டியடித்துள்ள சம்பவம் ஒன்று வியாழக்கிழமை (23) இடம் பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் பொலிஸ் அத்தியட்சகராக (எஸ்.பி.பி) கடமையாற்றி 2023 ம் ஆண்டு  ஓய்வு பெற்ற தென்னிலங்கை பகுதியைச் சேர்ந்தவர் குறித்த பிரதேசத்திலுள்ள மறுமலர்ச்சி விளையாட்டுக்கழக பொது மைதானமாக பயன்படுத்திவரும் மைதானத்தில் ஒருபகுதியை சம்பவதினமான இன்று பகல் 11.00 மணியளவில் ஆட்களுடன் கட்டைகள் கொண்டு அடைக்க முற்பட்டார்.

இதனையடுத்து அங்கு ஒன்று கூடிய பொதுமக்கள் இது விளையாட்டு மைதான காணி இதனை அடைக்க விடமுடியாது என தெரிவித்து அடைக்க விடாது தடுத்ததையடுத்து ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் எற்பட்டு பொரும் சர்ச்சை ஏற்பட்டதையடுத்து பொலிசார் வரவழைக்கப்பட்டனர்.

இதன் போது ஒய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி தான் சட்டரீதியாக 2023 ம் ஆண்டு ஒருவரிடம் இருந்து 15 பேச் காணியை சட்ட ரீதியாக சட்டத்தரணி ஊடாக வாங்கியுள்ளதாகவும் என்னிடம் சட்ட ரீதியான ஆவணங்கள் காட்டி தனது காணியை அடைக்க விடாது தடுத்துள்ளதாக பொலிசாரிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து பொதுமக்கள் குறித்த காணி கடந்த 1895 ம் ஆண்டு தொடக்கம் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருவதாகவும் இது அரசகாணி எனவும் இவர்; ஒரு பொலிஸ் அதிகாரி அவரது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக காணியை அபகரிக்க வந்துள்ளர். இவரைப் போல கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஒருவர் ஒரு ஆவனங்களை கொண்டுவந்து இது தனது காணி என சொந்தம் கொண்டாடிய நிலையில் அவரை தடுத்ததையடுத்து அவர் போனவர் போனவர்தான்.

அவ்வாறு இந்த மைதானத்தில் உள்ள காணியை அடைக்கவிடாது தடுத்தபோது பொலிஸ் அதிகாரி இதில் 15 பேச் காணியை தான் ஒருவரிடம் வாங்கியதாகவும் எனது 15 பேச் காணியை தரவும் நான் மைதானத்தை புனரமைத்து தருவாகவும் எங்களிடம் அவர் தெரிவித்தார்.

இவர் என்ன காரணத்துக்காக மைதானத்தை புனரமைத்து தரவேண்டும்? எனவே நாங்கள் குறித்த காணியை விற்பனை செய்தவர் யார் அவரை வரவழையுங்கள் நீங்கள் வைத்திருக்கும் ஆவணங்கள் யாவும் போலியாக தயாரிக்கப்பட்டது என தெரிவித்து வேலி அடைக்கவிடாது பொது மக்கள் தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்தும் மக்கள், குறித்த காணிக்கு சொந்தம் கொண்டாடிய பொலிஸ் அதிகாரியை வேலியடைக்க விடாது தடுத்தனர். இதனையடுத்து குறித்த பொலிஸ் அதிகாரி தடுத்த மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் அவர்களை எச்சரித்துவிட்டு அங்கிருந்து ஆட்களுடன் வெளியேறிச் சென்றுள்ளார்.

இது தொடர்பாக மட்டு தலைமையக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன்...

2025-02-16 14:29:48
news-image

கனேடிய தூதுவருக்கும் இலங்கை தமிழரசு கட்சி...

2025-02-16 14:20:18
news-image

தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-16 14:15:55
news-image

பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின்...

2025-02-16 14:05:16
news-image

வரவு செலவுத் திட்ட இறுதி வரைவு...

2025-02-16 13:22:29
news-image

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம்...

2025-02-16 12:59:41
news-image

பஹளவெம்புவ பகுதியில் மோட்டார் சைக்கிள் -...

2025-02-16 12:57:40
news-image

நெல்லின் உத்தரவாத விலையால் விவசாயிகள் நன்மையே...

2025-02-16 12:55:32
news-image

தமிழர் தாயகத்தின் அடையாளங்களை சிதைப்பது தடுக்கப்பட...

2025-02-16 13:54:14
news-image

பண்டாரகமவில் கார் விபத்து ; இளைஞர்...

2025-02-16 13:00:13
news-image

தெரணியகல பகுதியில் கோடாவுடன் சந்தேகநபரொருவர் கைது...

2025-02-16 12:28:20
news-image

செம்மணியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு...

2025-02-16 12:26:57